twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது தி சேலஞ் படக்குழு!

    |

    மாஸ்கோ: தி சேலஞ் படத்தின் படப்பிடிபை விண்வெளியில் முடித்து விட்டு படக்குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

    புதுமையான விஷயங்களையும் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் காட்சிப் படுத்துவதில் ஹாலிவுட் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.

     விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அரங்கம் முழுவதும் 4 நாட்கள் செம்ம கலக்ஷன்....அரண்மனை 3 விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அரங்கம் முழுவதும் 4 நாட்கள் செம்ம கலக்ஷன்....அரண்மனை 3

    விண்வெளியை மைய்யப்படுத்தி படம் எடுப்பது, வேற்றுக்கிரக வாசிகளுடன் சண்டை போடுவது என பிரமிக்க வைக்கும் வகையில் படங்களை தயாரித்து வசூலையும் விருதுகளையும் குவித்து வருகின்றனர்.

    தி சேலஞ் படம்

    தி சேலஞ் படம்

    அந்த வகையில் ரஷ்ய படக்குழு ஒன்று விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி விட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. அதாவது ரஷ்ய படக்குழு தி சேலஞ் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார்.

    விண்வெளி வீரருக்கு இதயப் பிரச்சனை

    விண்வெளி வீரருக்கு இதயப் பிரச்சனை

    விண்வெளியை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. அதன்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்படுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் விண்வெளிக்கு செல்கிறார்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு

    அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை.

    இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து 'சோயுஸ் எம்.எஸ்-19' விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    12 நாட்கள் படப்பிடிப்பு

    12 நாட்கள் படப்பிடிப்பு

    இந்நிலையில் திட்டமிட்டபடி 12 நாட்கள் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளது படக்குழு. படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுத்த உலகின் முதல் நாடு என்ற சாதனையை ரஷ்யா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பூமிக்கு திரும்பிய படக்குழு

    பூமிக்கு திரும்பிய படக்குழு

    படக்குழு விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பிய வீடியோவை ரஷ்ய ஸ்பேஸ் ஏஜென்ஸி வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்லும் பெண் மருத்துவராக நடிகை யுலியா பெரெசில்ட் நடித்துள்ளார். படக்குழுவினருடன் உதவிக்காக சென்ற விண்வெளி வீரர்கள் இருவர் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

      English summary
      Russian movie team returns from space. Russian movie team conducted shoot in space for the movie named The challenge.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X