என்னது தனுஷ் இல்லாம தி கிரே மேன் படத்தோட கிளிம்ப்ஸ் காட்சிகளா... ரசிகர்கள் காட்டம்!

நியூயார்க் : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தி கிரே மேன். இந்தப் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.

அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை தற்போது ரூசோ சகோதரர்கள் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், கோலிவுட்மட்டுமின்றி, பாலிவுட்டிலும் தற்போது டோலிவுட்டிலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஹாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மேன் என்ற படம் உருவாகியுள்ளது.

தி கிரே மேன் படம்

தி கிரே மேன் படம்

வரும் ஜூலை மாதத்தில் நெட்பிளிக்சில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

இந்தப் படத்தில் தனுஷ், கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்திருந்த கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட் மேன் ஆகிய படங்களின் கதாநாயகன் ரயன் காஸ்லிங் போன்றவர்கள் நடித்துள்ளனர். இதையடுத்து தற்போது இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியீடு

இதையொட்டி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை இன்றைய தினம் ரூசோ சகோதரர்கள் ஜோ மற்றும் ஆண்டனி வெளியிட்டுள்ளனர். இதில் மிரட்டலான ட்ரெயின் காட்சிகள் காணப்படுகின்றன. மேலும் கிறிஸ் ஈவான்ஸ் படத்தின் வில்லனாக மிரட்டியுள்ளார்.

 பழைய படம் வெளியீடு

பழைய படம் வெளியீடு

மேலும் கிறிஸ் ஈவான்ஸ் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்த பழைய படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் அவர் காணப்படுகிறார். இதையொட்டி ரசிகர்கள் படம்குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

தற்போது ரூசோ சகோதரர்கள் வெளியிட்டுள்ள படத்தின் டீசரில் தனுஷ் இடம்பெறாதது இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது. இதையடுத்து தனுஷின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட வலியுறுத்தி ரசிகர்கள் ட்விட்டரை அலறவிட்டு வருகின்றனர்.

எதிர்பாராத வாய்ப்பு

எதிர்பாராத வாய்ப்பு

பாலிவுட் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்ட தனுஷ், தனக்கு எப்போதுமே ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்ததாகவும் ஆனால் அவெஞ்சர்ஸ் படங்களை எடுத்த இயக்குநர்களுடன் இணைவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

புதிய கதவுகள் திறப்பு

புதிய கதவுகள் திறப்பு

இது மிகவும் சுவாரஸ்யமான வாய்ப்பு என்றும் இதன்மூலம் புதிய கதவுகள் தனக்கு திறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தனக்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் கடவுள் வழிநடத்துதலில்தான் நடக்கிறது என்றும் ஆனால் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை தான் மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கேங்ஸ்டராக தனுஷ்?

கேங்ஸ்டராக தனுஷ்?

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் மார்க் கிரேனே கடந்த 2009ல் எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X