இதயத்தை ரசித்து ருசித்துச் சாப்பிட்ட சல்மா... எப்படிம்மா??
கேன்ஸ்: கேன்ஸ் பட விழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகை சல்மா ஹேயக், டேல் ஆப் டேல்ஸ் படத்தில் தான் ஒரு கோரமான கடல் மிருகத்தின் இதயத்தை ருசித்து சாப்பிடுவது போன்ற காட்சியில் நடித்தது குறித்து விளக்கினார்.
டேல் ஆப் டேல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சல்மா ஹேயக். இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில் ஒரு கடல் மிருகத்தின் இதயத்தை சல்மா கடித்து ரசித்து ருசித்து சாப்பிடுவது போல உள்ளது.
இதுகுறித்த டிரெய்லர் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தக் காட்சியில் நடித்தது குறித்து தற்போது விளக்கியுள்ளார் சல்மா.

கேன்ஸ் படவிழா...
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் 68வது சர்வதேச பட விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சல்மா வந்தார். அப்போது டேல் ஆப் டேல்ஸ் படக் குழுவினருடன் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பயங்கர அனுபவம்...
அப்போது இந்த இதய மேட்டர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அது ஒரு பயங்கரமான அனுபவம். மறுபடியும் அதை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. அது நிஜ இதயம் அல்ல. இதய வடிவில் உருவாக்கப்பட்ட பாஸ்டாதான் அது. அது மட்டுமல்ல, மேலும் சிலவற்றையும்ரையும் சேர்த்து செய்திருந்தனர்.

கஷ்டப்பட்டு நடித்தேன்...
ஆன போதும், அதைச் சாப்பிடும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. இருந்தாலும் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக சிரமப்பட்டு சிறப்பாக நடித்தேன்' என்றார்.

குழந்தைக்காக...
இந்தப் படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ளார் சல்மா. அவருக்குக் குழந்தை கிடையாது. அதற்காக ஏங்கி வருகிறார். அப்போதுதான் ஒரு கோரமான கடல் மிருகத்தின் இதயத்தை சாப்பிட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று ஒருவர் ஐடியா கொடுக்கிறார்.

கணவர் தந்த இதயம்...
இதையடுத்து அந்த மிருகத்தைப் பிடித்து அதைக் கொலை செய்து இதயத்தைப் பிரித்து தனது மனைவியிடம் கொடுக்கிறார் ராஜாவாக நடித்துள்ள ஜான் ரீலி. இதுதான் காட்சியாகும்.

கொடுமையான அனுபவம்...
இந்தப் படம் பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ளது. இதற்காக மிகப் பெரிய பழமையான உடைகளை அணிந்து நடித்துள்ளார் சல்மா. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு உடையும் குறைந்தது 30 கிலோ எடையில் இருந்தது. கொடுமையாக இருந்தது அந்த அனுபவம்.

சோர்வு...
ஒரு காட்சியில் நான் பெருத்த உடையுடன் ஓடுவது போல காட்சி வைத்தனர். அந்தக் காட்சியைப் பலமுறை எடுத்தபோது நான் சோர்வாகி விட்டேன்.
தூக்கி கீழே போட்டனர்...
ஒரு கட்டத்தில் என்னை குதிக்கச் சொல்லி காட்சி எடுத்தனர். ஆனால் என்னால் முடியவி்லை. இதனால் 3 பேர் சேர்ந்து என்னை தூக்கி கீழே போட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











