Salma Hayek: சல்மா ஹயக்கை ஞாபகமிருக்கா? 56 வயதில் ஆடை அணியாமல் அப்படியொரு போஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: வைல்ட் வைல்ட் வெஸ்ட், ஃப்ரீடா, ஸ்பை கிட்ஸ் என பல ஹாலிவுட் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட பிரபல நடிகை சல்மா ஹயக் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
1993ம் ஆண்டு வெளியான மை கிரேஸி லைஃப் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானாவர் சல்மா ஹயக்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், 56 வயதிலும் செம ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.
பிளாக்பஸ்டர் ஹீரோயின்: பிரபல ஹாலிவுட் நடிகையான சல்மா ஹயக் ஒரு முறை ஆஸ்கர் நாமினியாக தேர்வாகி உள்ளார். வில் ஸ்மித்துக்கு ஜோடியாக வைல்ட் வைல்ட் வெஸ்ட் படத்தில் நடித்த சல்மா ஹயக் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க ஏகப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஃப்ரீடா, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ, ஸ்பை கிட்ஸ், க்ரோன் அப்ஸ், தி பைரேட்ஸ், சாசேஜ் பார்ட்டி, ஹிட்மேன் பாடிகார்ட், எட்டர்னல்ஸ், ஹவுஸ் ஆஃப் குச்சி உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

ட்ரீம் கேர்ள்: உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் சல்மா ஹயக். அப்போ எப்படி இருந்தாரோ, அதே போலத்தான் 56வது வயதிலும் செம ஹாட்டாக பிகினி உடையை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார் சல்மா ஹயக்.
இந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் சல்மா ஹயக் கலந்து கொண்டு கவர்ச்சி கவுன் அணிந்து கலக்கிய போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

56 வயதில் ஆடையணியாமல்: #WorldWellbeingWeek எனும் உலக நல்வாழ்வு வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு சானா குளியல் போட்ட சல்மா ஹயக் சானா பாத் எடுத்த பின்னர் அந்த அறையில் படுத்துக் கொண்டு தனது உடலை ஆடைக் கொண்டு மூடாமல் வெறும் டவல் மட்டும் வைத்து முன்னழகையும் முக்கிய பாகத்தையும் மறைத்தபடி கொடுத்த போஸ் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
வெறும் இரண்டு டவல் மட்டும் வைத்துக் கொண்டு தனது உடலை மறைத்தபடி பிரபல நடிகை சல்மா ஹாயக் கொடுத்துள்ள ஹாட் போஸுக்கு கிட்டத்தட்ட 7 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











