»   »  இந்தியாவைத் தாக்க இருக்கும் அடுத்த 'பூகம்பம்'!

இந்தியாவைத் தாக்க இருக்கும் அடுத்த 'பூகம்பம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: நேபாள பூகம்பத்தால் இந்தியாவிலும் ஏற்பட்ட பீதி இன்னும் மறையவில்லை. இந்த நிலையில், கம்பம் பற்றிய படம் ஒன்று இந்த மாதம் அமெரிக்காவில் வெளியாகிறது. அதுக்கு என்னன்னு கேட்கறீங்களா...நம்ம நாட்டிலும் இந்தப் படத்தை அதே நேரத்தில வெளியிடப் போறாங்க அதுவும் 3 டியில.

இயற்கையில் நடக்கும் பேரழிவுகளை மையமா வச்சு படம் எடுக்கும் ஹாலிவுட் காரர்கள் இதை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சான் ஆன்ட்ரியாஸ் என்ற பெயரில் பூகம்பம் பற்றிய படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் .

சுமார் 30 வருடங்களுக்கு எர்த் குவாக் என்ற படம் வெளிவந்தது. இது பூகம்பம் பற்றிய மிக முக்கியமான படம். அதனை எப்படியாவது முறியடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது 1௦௦ மில்லியன் டாலர் செலவில் இந்த படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

படத்தில் ஹீரோவின் வேலை இதுதான்

படத்தில் ஹீரோவின் வேலை இதுதான்

பூகம்பம் நாட்டில் எங்கு நடந்தாலும் அங்கு ஓடோடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றுகிறார் ஹீரோ (டுவைன் ஜான்சன்).

அடுத்து எங்கே வருகிறது பூகம்பம்

அடுத்து எங்கே வருகிறது பூகம்பம்

லாஸ் ஏஞ்செல்ஸ் தீயணைப்புத் துறையில் ஹெலிகாப்டர் படைப் பிரிவின் தலைவர் நம்ம ஹீரோ. அடுத்து எங்கே பூகம்பம் வரும் என்று கணித்துக் கூறும் ஆற்றல் உள்ளவர். (எங்க ஊருக்கு ஒரு தடவ வந்துட்டுப் போங்க சார்)

கதைன்னு ஒன்னு இருக்கனுமே

கதைன்னு ஒன்னு இருக்கனுமே

உலகின் மிகப் பெரிய பூகம்பம் கலிபோர்னியாவில் நடக்கிறது. அங்கு சென்று மக்களைக் காப்பாற்றும் ஹீரோவுக்கு அடுத்து சான் பிரான்சிஸ்கோவில் நடக்க இருக்கும் பூகம்பம் பற்றி தெரிய வருகிறது. சான்பிரான்சிஸ்கோவில் தான் ஹீரோவின் மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

தடுக்க முடியாது ஆனால் காப்பாற்ற முடியும்

தடுக்க முடியாது ஆனால் காப்பாற்ற முடியும்

பூகம்பத்தைத் தடுக்க முடியாது (தடுக்கிறதுக்கு அது மனுஷன் இல்ல பூகம்பம்) ஆனால் மக்களைக் காப்பாற்றி அங்கிருந்து வெளியே அனுப்ப முடியும். ஹீரோ தன் புத்திசாலித் தனத்தால எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.

ஹீரோ யார் தெரியுமா

ஹீரோ யார் தெரியுமா

மம்மி ரிட்டர்ன்ஸ், பாஸ்ட் ப்யுரியஸ் மற்றும் தி கார்பியன் கிங் போன்ற படங்களில் நடித்த டுவைன் ஜான்சன்தான் இந்தப் படத்தின் நாயகன்.

எந்தெந்த மொழிகளில்

எந்தெந்த மொழிகளில்

பிராட் பெய்டன் இயக்கி ஸ்டீவ் எட்லின் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் மே மாதம் 29 ம் தேதி நிறைந்த வெள்ளிகிழமையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப் பட்டு வெளியாகிறது. 3 டி ஸ்பெஷலும் உண்டாம்.

ஏற்கனவே நேர்ல பாத்து நொந்து போய் இருக்கோம் இதுல படம் வேறயா....!

English summary
San Andreas is a disaster film that follows a rescue-chopper pilot's dangerous journey after a massive earthquake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil