“பிளாக் விடோ“ நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ் தாயானார் !

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிளாக் விடோ நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸுனக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

2020ம் ஆண்டு காலின் ஜோஸ்டைக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஸ்கார்லெட் ஜொஹான்ஸ் காலின் ஜோஸ்ட் தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலக புகழ் பெற்ற நடிகை

மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன். இவர், தி ப்ரெஸ்டீஜ், லூசி, ஜோஜோ ரேபிட் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

விவாகரத்து

விவாகரத்து

ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் சக நடிகர் ரயன் ரேனால்ட்ஸை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர், ரொமைன் டௌரியாக் என்கிற ஃபிரெஞ்ச் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

3வது திருமணம்

3வது திருமணம்

வரிசையாக படங்களில் பிஸியாக நடித்து வந்த, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், நகைச்சுவையாளர் காலின் ஜோஸ்டைக் காதலித்து வந்து வந்தார். இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் 2019ம் ஆண்டு மே மாதம் திருமண நிச்சயம் நடந்தது. இதையடுத்து, 2020ம் ஆண்டு காலின் ஜோஸ்டைக்கை 3வதாக , ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் திருமணம் செய்து கொண்டார்.கொரோனா பீதியால் நெருங்கி உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

ஆண்குழந்தை

ஆண்குழந்தை

இந்நிலையில், கடந்த வாரம், ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் காலின் ஜோஸ்ட் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை காலின் ஜோஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் குழந்தைக்கு காஸ்மோ என்று பெயரிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். பலரும் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் காலின் ஜோஸ்ட் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பெண்குழந்தை உள்ளது

ஒரு பெண்குழந்தை உள்ளது

ஸ்கார்லெட் ஜொஹான்ஸிற்க்கு இது இரண்டாவது குழந்தை ஆகும். இவரின் முன்னாள் கணவர் ரொமைன் டௌரியாக்கி இணைந்திருந்த போது ஒரு பெண் குழந்தயை பெற்றோடுத்தார். அந்த குழந்தை தன்னுடயே ஸ்கார்லெட் ஜொஹான் வளர்த்து வருகிறார்.

ரகசியமாக வைத்திருந்தார்.

ரகசியமாக வைத்திருந்தார்.

ஸ்கார்லெட் ஜொஹான்ஸ் தான் கர்ப்பமாக இருந்த தகவலை மிகவும் ரகசியமாகவே வைத்து இருந்தார். 'பிளாக் விடோ விளம்பர நேர்காணலிலும் அவர் நேரில் தோன்றுவதை தவிர்த்து ஜூம் வழியாக பேட்டி கொடுத்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர் தோள்பட்டை வரை மட்டுமே காணப்பட்டார். பிளாக் விடோ திரையிடப்பட்ட போதும், ஸ்கார்லெட் கலந்து கொள்ளவில்லை. அவருடன் இணைந்து நடித்த டேவிட் ஹார்பர் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X