ஆஸ்கரும்.. ஸ்கார்லெட் ஜோஹன்சனும்.. இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வெல்வாரா ஜோஹன்சன்?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகள் 2020ல் சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகை என இரு பிரிவுகளில் தேர்வாகி உள்ள ஸ்கார்லெட் ஜோஹன்சன் இரண்டு ஆஸ்கர்களையும் தட்டிச் செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆஸ்கர் விதிப்படி ஒரே பிரிவின் கீழ் ஒரு நடிகர் இரண்டு முறை பரிந்துரைக்கப் பட முடியாது.
மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகை பிரிவிலும், ஜோ ஜோ ராபிட் படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஸ்கார்லட் ஜோஹன்சன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவெஞ்சர்ஸ் நாயகி
ஹாலிவுட்டின் கமர்ஷியல் படங்களில் அதிரடி காட்டி வந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன் கடந்த ஆண்டு மூன்று பெரிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லெட், ஜோஜோ ராபிட் மற்றும் மேரேஜ் ஸ்டோரி படங்களுக்காக ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

முதல்முறை
சூப்பர் ஹீரோ படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான ஸ்கார்லெட் ஜோஹன்சன், முதல்முறையாக ஆஸ்கர் நாமினியாக அதுவும் இரண்டு பிரிவுகளின் கீழ் ஒரே ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் அல் பசினோ உட்பட சில பிரபலங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு அமைந்திருந்தது.

டபுள் ட்ரீட்
ஆஸ்கர் விருதுகளை பொறுத்தவரையில் ஒரு நடிகர் ஒரே பிரிவின் கீழ், இரு முறை பரிந்துரைக்கப்பட முடியாது. ஜோ ஜோ ராபிட் படத்தில் ஜோ ஜோ கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சன் துணை நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இதே போன்று இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இரு விருதுகளையும் வென்றது வரலாறு.

போட்டி யார்?
ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் கடும் போட்டியாக இருப்பது, லிட்டில் உமன் படத்தின் நாயகி சைரோஸ் ரோனன் மற்றும் பாம்ஷெல் நாயகி சார்லிஸ் தெரான் தான். அதேபோல, துணை நடிகை போட்டியில் பாம்ஷெல் நடிகை மார்கட் ராபி மற்றும் லிட்டில் உமன் ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோர் கடும் போட்டியில் இருக்கின்றனர்.

பிளாக் விடோ ரிலீஸ் எப்போ?
மார்வெல் தயாரிப்பில் கடந்த ஆண்டு கேப்டன் மார்வெல் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகி உலகளவில் பல ஆயிரம் கோடி வசூலை ஈட்டின. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் மார்வெல் தயாரிப்பில் உருவாகி உள்ள பிளாக் விடோ படம் திரைக்கு வருகிறது. ஸ்கார்லெட் ஜோஹன்சன் மறுபடியும் ஷீரோவாக அதிரடி காட்டவுள்ளார்.


Click it and Unblock the Notifications











