ரகசியமாக நடந்தது விழா.. காமெடியனுடன் பிரபல நடிகை 3 வது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகை, காமெடியனை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
பிரபல முன்னணி ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன். இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
டிவி தொடர்களிலும் நாடகங்கள், ஏராளமான இசை ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார்.

பிளாக் விடோ
மார்வல் சூப்பர் ஹீரோ படங்களில் பிளாக் விடோ கேரக்டரில் நடித்ததன் மூலம் அதிக புகழ் பெற்றவர் இவர். த ஹோம் அலோன் 3, கோஸ்ட் வேர்ல்ட், அயர்ன்மேன் 2, கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் உட்பட பல படங்களில் இவர் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது.

திருமணம் நீடிக்கவில்லை
இவர் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ரியான் ரொனாட்ஸை 2008 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் மூன்று வருடங்களுக்கு பிறகு, ரொமைன் டாரியாக் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணமும் நீடிக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

காதலித்து வந்தார்
இந்நிலையில் இவர் அமெரிக்க நடிகரும் ஸ்டான்ட் அப் காமெடியனுமான காலின் ஜோஸ்டை (Colin Jost) காதலித்து வந்தார். ஸ்டேடன் ஐலேண்ட் சம்மர், ஹவ் டு பி சிங்கிள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார் காலின். டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர், சில தொடர்களுக்கு ஸ்கிரிப்ட்டும் எழுதியுள்ளார்.

கொரோனா பரவல்
இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த வருட தொடக்கத்தில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக உலகமே முடங்கியது. இதனால் பலர் தங்கள் திட்டங்களை மாற்றியுள்ளனர்.

காலின் ஜோஸ்ட்
கடந்த ஜூலை மாதம் கொரோனா காரணமாக, தங்கள் திருமணத் திட்டங்களை மாற்றி அமைத்திருப்பதாகக் கூறியிருந்தார், காலின் ஜோஸ்ட். இந்நிலையில் இவர்கள் சில நாட்களுக்கு முன், திருமணம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். மீல்ஸ் ஆன் வீல்ஸ் என்கிற அறக்கட்டளை இவர்கள் திருமணத்தை உறுதி செய்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











