இது லாக்டவுன் திருமணம்.. 60 வயதில் பிரபல நடிகையை மணந்து கொண்ட ஹீரோ.. திரையுலகினர் வாழ்த்து!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா லாக்டவுனில் பிரபல ஹீரோ, இளம் ஹீரோயினை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்

பிரபல ஹாலிவுட் ஹீரோ சீன் பென். இவர் ஏராளமான படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜட்ஜ்மென்ட் இன் பெர்லின், டெட்மேன் வாக்கிங், யுடர்ன், ஃபிபோர் நைட் ஃபால்ஸ், மிஸ்டிக் ரிவர், டிராபிக் தண்டர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மடோனாவின் கணவர்

மடோனாவின் கணவர்

இண்டியன் ரன்னர், இன்டு தவைல்ட், த லாஸ்ட் பேஸ் உட்பட சில படங்களை இயக்கியும் இருக்கிறார். சிறந்த நடிப்புக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் சீன் பென். வரும் 17 ஆம் தேதி 60 வயதைத் தொட இருக்கும் நடிகர் சீன் பென், பிரபல நடிகை மடோனாவின் முன்னாள் கணவர். 1985 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்த சீன் பென், 1989 ஆம் அண்டு விவாகரத்து பெற்றார்.

நடிகை ராபின் ரைட்

நடிகை ராபின் ரைட்

பிறகு நடிகையும் இயக்குனருமான ராபின் ரைட் என்பவரைக் காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணம் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது. 2010 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார். பிறகு தனியாக வசித்து வந்த சீன் பென், இந்த கொரோனா காலத்தில் லீலா ஜார்ஜ் என்ற அமெரிக்க நடிகையை காதலித்து திருமணம் செய்துள்ளார். லீலாவுக்கு வயது 28.

கோவிட்-19 திருமணம்

கோவிட்-19 திருமணம்

கடந்த நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி ஹாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஆனால், அமைதிகாத்து வந்த அவர்கள் கடந்த வியாழக்கிழமை திருமணம் செய்துள்ளனர். இதை நடிகர் சீன் பென் இப்போது உறுதி செய்துள்ளார். தனது திருமண மோதிரத்தைக் காண்பித்துள்ள அவர், 'நாங்கள் கோவிட்-19 காலத்தில் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியிருக்கிறார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

அதாவது, கவுன்டி கமிஷனர் ஜூமில் இருந்தார். நாங்கள் எங்கள் வீட்டில் இருந்தோம். எனது குழந்தைகளும் இருந்தனர். பிறகு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்' என்று கூறியுள்ளார். இதையடுத்து மூன்றாவது திருமணம் செய்துள்ள நடிகர் சீன் பென்- லீலா தம்பதிக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X