இந்த ஹாலிவுட் ஹீரோவின் சம்பளத்தை கேட்டாலே கிறுகிறுக்குதே
வாஷிங்டன்: ஹாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ தான்.
கோலிவுட், பாலிவுட் நடிகர்கள் சிலரின் சம்பளத்தை கேட்டாலே கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது. அதிலும் சிலர் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை கேட்டால் பலருக்கு ஆச்சரியம் அடங்கவில்லை. இந்நிலையில் உங்களை மேலும் ஆச்சரியப்படுத்தவிருக்கிறோம்.
ஹாலிவுட்டின் டாப் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

டைட்டானிக் நாயகன்
டைட்டானிக் படம் மூலம் உலக புகழ் பெற்ற லியானார்டோ டிகாப்ரியோ ஒரு படத்திற்கு 77 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்குகிறார். இவர் தான் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ.

ஜானி டெப்
வித்தாயசமான படங்களில் நடிக்கும் ஜானி டெப் படம் ஒன்றுக்கு 50 மில்லியன் டாலர் வாங்குகிறார்.

ஆடம் சான்ட்லர்
காமெடி ஹீரோ ஆடம் சான்ட்லர் ஒரு படத்தில் நடிக்க 40 மில்லியன் டாலர் வாங்குகிறார்.

வில் ஸ்மித்
கருப்பாக இருந்தாலும், களையாக இருக்கும் வில் ஸ்மித்தை ஒரு படத்தில் நடிக்க வைக்க அவருக்கு 36 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்.

டாம் ஹாங்க்ஸ்
நம்பிக்கை நட்சத்திரமான டாம் ஹாங்க்ஸ் படம் ஒன்றுக்கு 35 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார்.

பென் ஸ்டில்லர்
காதலும், காமெடியும் கலந்த படங்களில் நடிக்கும் பென் ஸ்டில்லர் ஒவ்வொரு படத்திற்கும் 34 மில்லியன் டாலர் வாங்குகிறார்.

ராபர்ட் டவ்னி ஜூனியர்
ஷெர்லாக் ஹோம்ஸ், அயர்ன் மேன் புகழ் நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர் ஒரு படத்திற்கு 31 மில்லியன் டாலரை சம்பளமாக பெறுகிறார்.

மார்க் வால்பெர்க்
பிளானட் ஆப் தி ஏப்ஸ் புகழ் மார்க் வால்பெர்க் ஒரு படத்தில் நடிக்க 28 மில்லியன் டாலர் பெறுகிறார்.

டாம் க்ரூஸ்
ஒரு காலத்தில் பெரிய ஸ்டாராக இருந்த டாம் க்ரூஸின் தற்போதைய சம்பளம் 22 மில்லியன் டாலர் ஆகும்.

ஜிம் கார்ரி
காமெடி நடிகர் ஜிம் கார்ரி ஒரு படத்திற்கு 20 மில்லியன் டாலர் வாங்குகிறார்.

ஜேம்ஸ் பாண்ட்
ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிரெய்க் ஒரு படத்திற்கு 20 மில்லயன் டாலர் சம்பளம் வாங்குகிறார்.

ராப்ட் பேட்டின்சன்
ட்வைலைட் சீரியஸ் படங்கள் மூலம் புகழ்பெற்ற ராப்ர்ட் பேட்டின்சன் ஒரு படத்திற்கு 20 மில்லியன் டாலர் பெறுகிறார்.

பிராட் பிட்
ஏஞ்சலினா ஜூலியின் பார்ட்னர் பிராட் பிட் ஒரு படத்தில் நடிக்க 20 மில்லியன் டாலர் வாங்குகிறார்.

மேட் டாமன்
மேட் டாமன் ஒவ்வொரு படத்திற்கும் 18 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார்.


Click it and Unblock the Notifications











