இளம் பாடகியுடன் கேப்டன் அமெரிக்கா நடிகர் டேட்டிங்கா? அந்த ஒரு மேட்டரால் கொளுத்திப் போட்ட ரசிகர்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாடகியும் நடிகையுமான செலினா கோமஸை கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் காதலிப்பதாக உலகளவில் தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
மார்வெல் நிறுவனம் தயாரித்த கேப்டன் அமெரிக்கா வரிசை படங்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிறிஸ் எவான்ஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
40 வயதாகும் கிறிஸ் எவான்ஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் Most Eligible Bachelor ஆக இருந்து வருகிறார்.

கிறிஸ் எவான்ஸ்
கிறிஸ் எவான்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்டோபர் ராபர்ட் எவான்ஸ் 1997ம் ஆண்டு வெளியான Biodiversity: Wild About Life! திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். கேப்டன் அமெரிக்கா படத்திற்கு முன்பாகவே 2005ம் ஆண்டு வெளியான Fantastic Four படத்தில் Human Torch ஆக நடித்து அசத்தி இருந்தார்.

கேப்டன் அமெரிக்கா
2011ம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் படத்தில் கேப்டன் அமெரிக்காவாக ஷீல்ட் உடன் இவர் நடித்து பட்டையை கிளப்பினார். அவெஞ்சர்ஸ் படங்களிலும் தோர் உள்ளிட்ட மற்ற அவெஞ்சர் ஹீரோக்களின் படங்களிலும் இவர் கேப்டன் அமெரிக்காவாக நடித்துள்ளார்.

செலினாவுடன் காதல்
பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையுமான செலினா கோமஸ் உடன் கிறிஸ் எவான்ஸ் தற்போது காதலில் விழுந்துள்ளதாக ஹாலிவுட் முழுக்க பேச்சு எழுந்துள்ளது. உலகம் முழுக்க கிறிஸ் எவான்ஸ் மற்றும் செலினா கோமஸ் இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

என்ன மேட்டர்
நடிகர் கிறிஸ் எவான்ஸ் மற்றும் செலினா கோமஸ் காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக இருந்து வருகின்றனர் என நெட்டிசன்கள் கிளப்பி விட காரணமே கிறிஸ் எவான்ஸ் Knives Out படத்தில் அணிந்திருந்த ஸ்வெட்டரை அணிந்து கொண்டு செலினா கோமஸ் சமீபத்தில் போஸ் கொடுத்தது தான் என்கின்றனர்.

ஸ்வெட்டரால் பரவிய வதந்தி
29 வயதாகும் செலினா கோமஸ் 40 வயதாகும் நடிகர் கிறிஸ் எவான்ஸை காதலித்து வருவதாக கிளம்பிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் செலினா கோமஸ் அணிந்த அந்த ஸ்வெட்டர் கிறிஸ் எவான்ஸின் ஸ்வெட்டர் இல்லை என்றும் சிலர் மறுத்து வருகின்றனர். கடந்த 2015ல் பேட்டி ஒன்றில் பேசிய செலினா கோமஸ் தனக்கு க்றிஸ் எவான்ஸ் மீது கிரஷ் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











