யாரையும் பலாத்காரம் செய்யவில்லை.. நீதிமன்றத்தில் அதிரடியாக மறுத்த ஹார்வி வெயின்ஸ்டீன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் கடந்த திங்கட்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது தான் யாரையும் எந்தவொரு நடிகையையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என அதிரடியாக மறுத்தார்.

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஏஞ்சலினா ஜூலி, சல்மா ஹயக் மற்றும் கின்னத் பல்ட்ரோ உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

140 வருட சிறைத் தண்டனை

140 வருட சிறைத் தண்டனை

நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட நீதிமன்றங்களிலும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான பாலியல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 140 வருட சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

90 பெண்கள் வழக்கு

90 பெண்கள் வழக்கு

2017ம் ஆண்டு உலகளவில் மீடூ விவகாரம் கிளம்ப காரணமே தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தான். ஹாலிவுட்டில் பெண்களுக்கு பட வாய்ப்பு பெற்று தருவதாக ஆசை காட்டி ஏஞ்சலினா ஜூலி, சல்மா ஹயக் உள்ளிட்ட பிரபல நடிகைகள் உள்பட 90 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

பலாத்காரம் செய்யவில்லை

பலாத்காரம் செய்யவில்லை

5 பெண்களை பலாத்காரம் செய்தார் ஹார்வி வெயின்ஸ்டீன் என்கிற வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஆஜரான ஹார்வி வெயின்ஸ்டீன் தான் இதுவரை எந்தவொரு பெண்ணையோ நடிகையையோ பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என அதிரடியாக மறுத்துள்ளார்.

சம்மதத்துடன்

சம்மதத்துடன்

நடிகைகளுடன் உடல் உறவு கொண்டது எல்லாம் உண்மை தான். ஆனால், இதுவரை எந்த பெண்ணையும் வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளவில்லை என்றும் அனைத்துமே இருவர் சம்மதத்துடனே நடந்ததாகவும் ஹார்வி வெயின்ஸ்டீன் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கு வரும் அக்டோபர் 25க்கு மறு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எல்லாமே பொய்

எல்லாமே பொய்

ஏற்கனவே நியூயார்க் நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின் போதும் ஹார்வி வெயின்ஸ்டீன் இதே வாதத்தை தான் முன் வைத்தார். அவரது வழக்கறிஞரும் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றமற்றவர் என வாதாடி வந்தார். ஆனால், ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கிய நிலையிலேயே அவருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X