2021ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த ஹாலிவுட் படம்.. எது தெரியுமா? எவ்ளோன்னு பாருங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2021ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த படம் ஷாங் சி என தெரியவந்துள்ளது.

ஷாங்-சி மற்றும் லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்' ஹாலிவுட் திரைப்படம் கடந்த இரண்டாம் தேதி வெளியானது.

அமெரிக்காவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநரான டெஸ்ட்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ளார்.

மூன்று நாட்கள் வசூல்

மூன்று நாட்கள் வசூல்

நான்கு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் நான்காவது வார கடைசியில் வடக்கு அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 13.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று நாட்களில் இந்த தொகையை வசூலித்துள்ளது ஷாங் சி திரைப்படம்.

ஷாங் சி - நடிகர்கள்

ஷாங் சி - நடிகர்கள்

ஷாங் சி திரைப்படத்தில் சைனீஸ் - கன்னடியன் நடிகரான சிமு லியூ லீடிங் ரோலில் நடித்துள்ளார். அவ்க்வாபினா, மெங்கர் ஸாங், ஃபலா சென், ஃபுளோரியன், மன்டினு, பெனிட்டிக்ட் வோங் மைக்கேல் யோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிளாக் விடோ சாதனை முறியடிப்பு

பிளாக் விடோ சாதனை முறியடிப்பு

சூப்பர் ஹீரோ படமான 'ஷாங்-சி' அதிக வசூலை குவித்துள்ளதன் மூலம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 2021 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக சக மார்வெல் படமான 'பிளாக் விடோ' படத்தின் சாதனையை முறியடித்ததாகக் கூறப்படுகிறது.

பிளாக் விடோ படம் பீட்

பிளாக் விடோ படம் பீட்

சிமு லியு நடித்த சூப்பர் ஹீரோ அட்வென்ட்சர் படமான ஷாங் சி, 3,952 தியேட்டர்களில் இருந்து 3.59 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இது மொத்தமாக 186.7 மில்லியன் டாலர்களை வசூலித்த பிளாக் விடோ படத்தை பீட் செய்துள்ளது.

ஓடிடியிலும் சாதனை

ஓடிடியிலும் சாதனை

ஜூலை மாதம் திரையிடப்பட்ட 'பிளாக் பிடோ' வெளியானதிலிருந்து சுமார் 183.5 மில்லியன் டாலர்களை திரையரங்குகளில் வசூலித்துள்ளது. இது OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் குறைந்தது $ 125 மில்லியன் சம்பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல படங்களுக்கு நடுவில்

பல படங்களுக்கு நடுவில்

'ஷாங் -சி' திரைப்படம் பிளாக் விடோ படத்தின் இந்த சாதனையை முறியடிப்பது திரையரங்கு வணிகத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது 45 நாட்கள் தனித்தன்மையுடன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது - 'பிளாக் விடோ' மற்றும் பல புதிய வெளியீடுகளுக்கு நடுவே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

தர வரிசையில் முதலிடம்

தர வரிசையில் முதலிடம்

இந்த வார இறுதியில், 'ஷாங்-சி' தொடர்ந்து நான்காவது வார இறுதியில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது, இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட 12 மில்லியன் டாலரில் இருந்து 14 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X