Vin Diesel: என்னோட உள்ளாடையை பலவந்தமாக இழுத்தார்.. வின் டீசல் மீது பெண் உதவியாளர் பாலியல் புகார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: Sexual assault case against Vin Diesel - ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் வரிசை படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் வின் டீசல் அவர் மீது தற்போது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய ஆஸ்டா ஜானசன் (Asta Jonasson) பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
படத்துக்கு பேரே XXX என வைத்து ஆக்ஷனில் அதகளம் செய்து உலகளவில் பிரபலமானவர் வின் டீசல்.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்கள் 10 பாகங்களை கடந்து உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வரும் வின் டீசல் மீது இப்படியொரு பழி விழுந்திருப்பது அவரது ரசிகர்களையும் ஹாலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வின் டீசல்: ஹாலிவுட்டில் 200 முதல் 300 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளமாக வாங்கி நடித்து வருகிறார் வின் டீசல். 56 வயதை கடந்த வின் டீசல் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி தனது படங்களை எடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் மீது அவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜானசன் பாலியல் புகாரை வெளிப்படையாக கூறி வியாழனன்று வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
எப்போ நடந்தது?: ஃபாஸ்ட் ஃபைவ் படத்திற்கான ஷூட்டிங்கின் போது கடந்த செப்டம்பர் 2010ம் ஆண்டு அட்லாண்டாவில் ஸ்டார் ஹோட்டலில் பல பெண்களுடன் ரூம் போட்டு உல்லாசமாக இருந்தார் வின் டீசல். அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்படக் கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்துக் கொண்டிருந்தோம். அவரை கிளப்பி ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த பெண்கள் எல்லாம் சென்று விட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
உள்ளாடையை இழுத்து: முதலில் மார்பகங்களை பிடித்து இழுத்து வழுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். நான் அவரது இச்சைக்கு மறுக்கவில்லை. பலவந்தமாக என்னுடைய உள்ளாடையை கழட்டி பாலியல் தொல்லைக் கொடுத்தார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை வேலையில் இருந்து அடுத்த நொடியே தூக்கி அடித்து விட்டார் என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் ஆஸ்டா ஜானசன்.
அமைதி: ஆனால், இது தொடர்பாக வின் டீசல் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வராமல் அமைதியாக உள்ளார் என ஹாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மீ டூ விவகாரம் ஹாலிவுட்டில் ஹார்வே வெயின்ஸ்டைன் போன்ற பல பிரபலங்களின் பாலியல் கொடூரத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது வின் டீசலும் அப்படியொரு வழக்கில் சிக்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











