Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிஸ்னியின் 'ஃப்ரோஸன் 2' படத்தில் பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடி அசத்திய ஸ்ருதி ஹாசன்
சென்னை: மிகப் பெரும் பொருட்செலவில் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் வழங்க தயாரான டிஸ்னினியின் 'ஃப்ரோஸன் 2' திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவில் தேர்வானவர் தான் ஸ்ருதி ஹாசன்.
ஆம்... பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு மிக்க எலிசாவுக்கு தமிழ்ப் பதிப்பில், ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்... என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், பாடகியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் தங்கள் அபிமான நடிகையின் குரலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், "ஃப்ரோஸன் திரைப்படத்தில் எல்ஸா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்ஸா தன் இளைய சகோதரி அன்னா மீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரி மீது அந்த அளவுக்கு பாசம் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்" என்றார்.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவிருக்கும் படம்தான் 'ஃப்ரோஸன் 2'. புதிரான கதைக்கரு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், மற்றும் எல்ஸா -அன்னா ஆகியோரின் சாகசங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்பது திண்ணம்.
இது மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களும் இப்படத்துக்கு உண்டு '.ஃப்ரோஸன் 2' படத்தின் ஹிந்தி பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
ஃப்ரோஸன் 2 படம் குறித்து....
எல்ஸா ஏன் மந்திர சக்தியுடன் பிறந்தாள்? இதற்கான விடை தேடும் முயற்சி, அவளது ராஜ்ஜியத்தை பயமுறுத்துகிறது. அன்னா, கிறிஸ்டாப், ஒல்ப் மற்றும் சுவெனுடன் பிரசித்தமான இந்த ஆபத்து மிக்க பயணத்தைத் துவக்குகிறாள் எல்ஸா. 'ஃப்ரோஸன்' படத்தில் தனது பலம் அனைத்தும் உலகுக்கு அதிகம் என்று பயப்படும் அன்னா, 'ஃப்ரோஸன் 2' படத்தில் போதும் என்று நினைக்கிறாள்.
இப்படியொரு பெர்த் டே ட்ரீட்டா.. சூப்பர் அசோக் செல்வன்!
ஆஸ்கர் விருது வென்ற ஜெனிஃபர் லீ கிறிஸ் பக் இயக்கத்தில், பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பில் உருவாகியிருக்கிறது 'ஃப்ரோஸன் 2'. கிறிஸ்டன் ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் எழுதிய பாடல்களுக்கு இன்டினா மெல்ஸல், கிறிஸ்டன் பெல், ஜொனாதன் கிராஃப் மற்றும் ஜோஸ் காட் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.
டெயில் பீஸ்
2013ஆம் ஆண்டு வெளியான 'ஃப்ரோஸன்' திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு மிகச் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் 'ஃப்ரோஸன்' பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற லெட் இட் கோ பாடல் மற்றும் இசைக்காக ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் ஆகியோரும் ஆஸ்கர் விருது வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெளியாகவிருக்கும் 'ஃப்ரோஸன் 2 ' படத்தின் சிறப்பம்சம் நமது உலக நாயகனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்ததோடு மூன்று பாடலை பாடியுள்ளார் என்பது மற்ற மொழிகளில் வரப்போகும் 'ஃப்ரோஸன் 2 " படத்திற்கும் தமிழுக்கும் உள்ள வித்யாசம். நம் தமிழ் சினிமா என்று ஸ்பெஷல் தான் !!!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?