Camila: பிரேக்கப் ஆனா என்ன இப்போ.. பிடிச்சிருந்தா எக்ஸ் லவ்வர் கூடவும் அதை பண்ணலாம்.. பாடகி பகீர்!

சென்னை: பாடகி கமிலா கபெல்லோ ஷான் மென்டிஸுடனான பிரேக்கப்பிற்கு பிறகு ஆஸ்டின் கெவிச்சுடன் டேட்டிங்கில் இருந்தார். கெவிட்ச் அமெரிக்காவின் லாக்ஸ் கிளப் என்ற பிரீமியம் டேட்டிங் ஆப்பின் நிறுவனராக இருந்த நிலையில் இவர்களின் காதல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. கடந்த 2019ம் ஆண்டில் இவர்களின் காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் தங்களுக்குள் பிரேக்அப் ஆகிவிட்டதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். தாங்கள் தங்களது உறவை நண்பர்களாகவே தொடங்கியதாகவும் நண்பர்களாகவே பிரிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்ட ரசிகர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். பல சம்பவங்களில் அதிகப்படியான தன்னுடைய கருத்துக்களை மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக பேசுவதன்மூலம் கமிலா கபெல்லோ சர்வதேச அளவில் பிரபலமானவர். தான் குழந்தைகளை போலவே இருக்க விரும்புவதாக முன்னதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். ஆனால் பொதுவெளியில் நீச்சல் உடையில் தான் வெளியில் வந்தபோது, தான் ஸ்லிம்மாக தெரிவதற்காக தன்னுடைய மூச்சை இழுத்து பிடித்ததாகவும் அவர் குறை பட்டுக் கொண்டார்.

Singer Camila Cabllo spoke about break up intimacy

பாடகி கமிலா கபெல்லோ: பிரபல அமெரிக்க பாடகி கமிலா கபெல்லோ தன்னுடைய யூனிக்கான வாய்ஸ் மூலம் எராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வெளிப்படையாக மற்றும் அதிரடியாக பகிர்ந்து ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் கமிலா கபெல்லோ. முன்னதாக ஷான் மென்டிசுடன் டேட்டிங்கில் இருந்த கமிலா கபெல்லோ அவரை பிரேக்அப் செய்த நிலையில் 9 மாதங்களிலேயே டேட்டிங் ஆப்பின் சிஇஓ-வாக இருந்த கெவிச்சுடன் டேட்டிங் செய்தார். முன்னதாக மென்டிசுடன் கடந்த 2019ம் ஆண்டில் துவங்கிய டேட்டிங்கை 2021ம் ஆண்டில் பிரேக்அப் செய்தார். இதை இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

பிரேக்அப் உறவு குறித்து கமிலா: இதனிடையே தற்போது கமிலா கபெல்லோ தன்னுடைய முந்தைய காதல் மற்றும் பிரிவுக்கு பிறகும் தனக்கு பிடித்ததால் தான் மென்டிசுடன் உறவு கொண்டதாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். பிரேக்கப்பிற்கு காதலரை பிடித்திருந்தால் அவர்களுடன் உறவு கொள்வதில் தவறில்லை என்றும் தற்போது தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் மென்டிசுடன் தான் பிரேக்அப் செய்த போதிலும் 2023ம் ஆண்டில் இரண்டு ஆண்டுகள் கழித்து அவருடன் உறவு கொண்டிருந்ததாகவும் தனக்கு அவருடன் இருந்தது பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உறவை நீடிக்க விரும்பவில்லை: இரண்டாவது முறையும் மென்டிசுடனான பிரேக்கப்பிற்கு தங்களுக்குள் பொருத்தமில்லாத பல விஷயங்கள் இருந்ததையே அவர் காரணமாக கூறியுள்ளார். தான் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வழியில் சென்றுக் கொண்டிருந்த நிலையில், இந்த உறவை மீண்டும் தொடர தான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்டாயத்திற்காக இந்த உறவை தொடர தான் விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இதை உணர்வதற்கு இருவருக்குமே அதிகமான நேரங்கள் தேவைப்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நண்பர்களாகவே பிரிந்த கமிலா -மென்டீஸ்: மென்டீசுடனான பிரேக்கப் குறித்து இருவரும் கூட்டாகவே அறிவித்தனர். நண்பர்களாக தங்களுடைய பயணத்தை துவங்கிய நிலையில் நண்பர்களாகவே பிரிந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X