குளியலுக்கு பிறகு சிறுநீரை பிடித்து குடிக்கும் பிரபல நடிகை... வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
தினமும் அதிகாலை குளித்துவிட்டு தனது சிறுநீரை குடிப்பாராம் அமெரிக்க பாப் பாடகி மடோனா.
வாஷிங்டன் : அமெரிக்கப் பாடகி மடோனா தனது சிறுநீரை தானே குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்க பாடகி மடோனா. 61 வயதாகும் இவர் நடிகையும் கூட.

இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி மடோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஐஸ் கட்டிகளை ஒரு குளியல் டப்பில் போட்டு மடோனா குளிக்கிறார். பின்னர் ஒரு கோப்பையில் சிறுநீரை எடுத்து குடிக்கிறார்.
கூடவே அதில் தனது ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் இதுவே காரணம் என அவர் கூறியிருக்கிறார்.
மடோனாவின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது போன்று தனது சிறுநீரைத் தானேக் குடிக்கும் பழக்கம் பல பிரபலங்களுக்கும் உள்ளது. இந்தியாவிலும் கூட முன்னாள் பிரதமராகிய மறைந்த மொரார்ஜி தேசாய்க்கும் இந்த வினோத பழக்கம் இருந்தது. மிராக்கிள்ஸ் ஆப் யூரின் தெரபி என்ற பெயரில் இது பற்றி அவர் ஒரு புத்தகம்கூட எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











