ஸ்கைபால்: இந்தியாவிலும் வசூல் பிரமாதம்யா..!
மும்பை: ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் புதிய படமான ஸ்கைபால் இந்தியாவிலும் வசூலில் கலக்க ஆரம்பித்துள்ளதாம்.

23வது பாண்டு...
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 23வது வெளியாகியுள்ளது ஸ்கைபால்.

கிரேக்குக்கு கடைசிப் படம்
ஜேம்ஸ் பாண்ட்டாக கடந்த சில ஆண்டுகளாக நடித்து வரும் டேணியல் கிரேக் இனிமேல் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருப்பதால் இதுவே அவரது கடைசி பாண்ட் படமாக இருக்கும் என்று தெரிகிறது.

இங்கிலாந்தில் வசூல் மழை
ஸ்கைபால் படத்திற்கு இங்கிலாந்தில் பிரமாதமான வசூல் கிடைத்து வருகிறது. பல சாதனைகளையும் இது குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலும் பிரமாத வசூல்
இந்த நிலையில் இந்தியாவிலும் ஸ்கைபால் ரிலீஸாகியுள்ளது. வசூலிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று வரை ரூ. 34.5 கோடி
வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில் நேற்று வரை ரூ. 34.5 கோடியை வசூலித்துள்ளதாம் ஸ்கைபால்.

2 சாதனை
இதுவரை எந்த ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இவ்வளவு பெரிய வசூல் ஆனதில்லையாம். இது முதல் சாதனை. அதேபோல ஒரு 3டி அல்லாத படத்திற்கு இத்தாம் பெரிய வசூல் கிடைத்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications











