அதிரிபுதிரியாய் ஓடிக் கொண்டிருக்கும் 'ஸ்கைபால்'... சாதனைகளைக் குவிக்கிறது!
லண்டன்: பாண்ட் படம்னா இங்கிலாந்தில்தான் அது பெரிய அளவில் பட்டையைக் கிளப்பும், சொந்த ஊராச்சே. அதை இப்போது லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் ஸ்கைபால் படமும் நிரூபித்திருக்கிறது. இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸில் இப்படம் அடுத்தடுத்து சாதனைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளதாம்.

புது பாண்டு
பாண்ட் பட வரிசையில் லேட்டஸ்டாக வந்திருக்கும் படம்தான் ஸ்கைபால். டேணியல் கிரேக் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் இங்கிலாந்தில் வசூலைக் குவித்து வருகிறதாம்.

முதல் வாரத்திலேயே வசூல் சாதனை
முதல் வாரத்திலேயே இப்படம் 37.2 மில்லியன் பவுண்டுகளை வசூலித்துள்ளதாம். இது இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றிலேயே பெரிய சாதனையாம்.

ஹாரிபாட்டரை ஓரம் கட்டியது
இதற்கு முன்பு இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸில் முதல் வார வசூல் சாதனையை வைத்திருந்த படம் ஹாரி பாட்டர் படம்தான். அந்த சாதனை அளவு 35.7 மில்லியன் பவுண்டுகளாகும்.

3டி இல்லாமலேயே இந்த வசூல்
இத்தனைக்கும் ஹாரி பாட்டர் படங்கள் 3டியில் வெளியாகி வசூலைக் குவித்தன. ஆனால் ஸ்கைபால் 3டி படம் இல்லை. அப்படி இருந்தும் பெரிய வசூலைக் குவித்ததால் அதுவும் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறதாம்.

சனிக்கிழமை வசூல் சாதனை
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வார இறுதியில் பெரிய வசூலை அள்ளிய படம் என்ற சாதனையையும் ஸ்கைபால் படைத்துள்ளதாம்.

இது 24வது படம்
உங்களுக்கு நினைவிருக்கிறதா... ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் இது 24வது படமாகும்.


Click it and Unblock the Notifications











