'ஸ்மர்ஃப்ஸ்-2'- குழந்தைகளுக்கும் குழந்தை மனம் கொண்டவர்களுக்கும்!

By Shankar

நூறாண்டு கண்ட இந்திய சினிமாவில் இப்போதும் கூட குழந்தைகளுக்கான படங்கள் கணிசமாக உருவாகும் நிலை இல்லை. ஆனால் ஹாலிவுட்டில் குழந்தைகள் படங்கள்தான் வசூலைக் கொட்டுகின்றன.

குறிப்பாக அனிமேஷன் படங்கள். 'ஸ்மர்ஃப்ஸ்' என்கிற படத்தின் முதல்பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இப்போது 'ஸ்மர்ஃப்ஸ்-2' உருவாக்கப்பட்டுள்ளது.

சின்ன சின்ன உருவங்களை வைத்து சிகரம் தொட்ட இப்படம், ஒரு அமெரிக்கன் ஆக்ஷன் சாகசம் மற்றும் நகைச்சுவைச் சித்திரம்.

பெல்ஜியம் கேரக்டர்கள்

பெல்ஜியம் கேரக்டர்கள்

சின்ன சின்ன உருவ 'ஸ்மர்ஃப்ஸ் கேரக்டரின் பூர்வீக நாடு பெல்ஜியம்.1958-ல் காமிக்ஸ் புத்தகங்களில் பிரபலமானது. பியோ என்கிற ஓவியர்தான் இதன் தோற்றத்தை வடிவமைத்து காமிக்ஸில் கலக்க வைத்தார். பிறகு 1981ல் தொலைக்காட்சித் தொடரின் மூலம் பரந்த ரசிகர்களைக் கவர்ந்தது. புத்தகங்கள், டிவி சீரியல், விளம்பரங்கள், வீடியோ கேம்ஸ், பொம்மைகள், தீம்பார்க் என்று புகழ்பெற்ற இந்த 'ஸ்மர்ப்ஸ்', அடுத்து திரைப்படமாகவும் வந்து கலக்கியது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

முதல் பாகம் கொடுத்த வசூலிலும் மகிழ்ச்சியிலும் அடுத்த பாகத்தை நம்பிக்கையுடன் உருவாகியுள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற ‘தி ஸ்மர்ஃப்ஸ்' என்ற அனிமேஷன் படத்தின், இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது. சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ராஜா கோஸ்நெல் 'ஸ்மர்ஃப்ஸ் 2'யும் இயக்கியுள்ளார்.

3 டியில்...

3 டியில்...

நீல் பேட்ரிக், ஜெய்மா மேய்ஸ், கேட்டி பெர்ரி, ஹங்க் அஜாரியா உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலை நாடுகளில் பிரபலமான ஸ்மர்ஃப்ஸ் கேரக்டரை வைத்துக்கொண்டு காமெடி படமாக இதை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளனர். முதல் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்த நீல் பேட்ருக்கும் ஜெய்மாவும் இதிலும் அப்படியே தொடர்கிறார்கள். அனிமேஷன் கேரக்டர்கள் செய்யும் லூட்டிகள் கிராபிக்ஸ் பிரமாண்டத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது .

கதை

கதை

படத்தில் வரும் ஸ்மர்ஃப்ஸ் அதனுடைய உலகத்திலிருந்து பூமிக்கு வருகிறது. இதை இங்குள்ள ஒரு மந்திரவாதி தவறாக பயன்படுத்திக் காரியங்களைச் சாதிக்க முயல்கிறான். அவனுடைய மாயவித்தை ஸ்மர்ஃப்ஸ்களிடம் என்னென்ன செய்கிறது? கடத்தப்பட்ட ஸ்மர்ஃப்ஸ் என்னவாகிறது என்கிற சிறிய கதைதான். ஆனால் 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் நேரம் போவதே தெரியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார்களாம்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஸ்மர்ஃப்ஸ் 2' நேற்றே அமெரிக்காவில் வெளியாகிவிட்டது. படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. வழக்கமாக விமர்சனத் தாக்குதல் நடத்தும் பத்திரிகைகள் கூட 'குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனாலும் குறை சொல்ல ஒன்றுமில்லை,' என்று கூறியுள்ளன.

இந்தப் படம் குழந்தைகளுக்கும் குழந்தை மனம் கொண்டவர்களுக்கும் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்கள் கூறுகின்றன . குழந்தைகளோடு போங்க; குழந்தைகளா மாறி ரசிங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X