காதலிக்கு அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்பைடர் மேன் ஹீரோ டாம் ஹாலண்ட்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்ட் தனது காதலி ஜெண்டயாவுக்கு அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட். Arrietty என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகமானார்.
25 வயதான டாம் ஹாலண்ட் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ஸ்பைடர் மேன் சீரிஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்கள் பெரும் ஹிட்டானது.

காதல் ஜோடியாக
ஹாலிவுட் நடிகையான ஜெண்டயாவுடன் டாம் ஹாலண்ட்டுக்கு காதல் என தகவல் பரவியது. இருவரும் அடிக்கடி பார்ட்டிகளில் பங்கேற்ற போட்டோக்களும் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டது. ஹாலிவுட்டின் இளம் காதல் ஜோடியாக டாம் ஹாலண்ட் மற்றும்
ஜெண்டயா ஜோடி வலம் வருகிறது.

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து
ஜெண்டயா செப்டம்பர் 1ஆம் தேதி தனது 25 வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது ஜெண்டயா ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவரது கோ-ஸ்டார் மற்றும் வதந்தி காதலரான டாம் ஹாலண்ட், நடிகைக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இருவரும் மிரர் செல்பி
இருவரின் அழகான மிரர் செல்ஃபியை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள டாம் ஹாலண்ட் அவரை "என் எம்ஜே" என்று அழைத்துள்ளார். மேலும் "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தியுள்ளார். ஸ்பைடர் மேன் படத்தில் எம்ஜே என்ற கதாபாத்திரத்தில் ஜெண்டயா நடிக்கிறார்.

காதலால் தலைப்புச் செய்தி
இரண்டு நட்சத்திரங்களும் நீண்ட காலமாக தங்களின் காதல் உறவால் தலைப்புச் செய்திகளாகி வருகின்றனர். டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா ஜோடி, சமீபத்தில் தங்களின் நண்பர்களின் திருமணத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒரு வீடியோவில், மணமகனும், மணமகளும் நடனமாடும் போது ஜெண்டாயாவைப் பார்க்கும்போது டாம் ஹாலண்டின் எக்ஸ்பிரஷன்கள் மிஸ் பண்ண முடியாத அளவுக்கு மிகவும் அழகாக இருந்தது.

ஸ்பைடர் மேன் ஷூட்டிங் ஸ்பாட்
திருமணத்தின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது. ஸ்பைடர் மேன் படத்தின் செட்களிலிருந்து இருவரின் பிடிஎஸ் (பிஹைண்ட்-தி-சீன்) புகைப்படத்தையும் டாம் ஹாலண்ட் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் ஜெண்டயா இருவரையும் சேர்த்து மிரர் முன்பு கேமராவுடன் கிளிக் செய்துள்ளார். இந்த போட்டோவுக்கு, "என் எம்ஜே, உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள். நீங்கள் எழுந்தவுடன் ஒரு அழைப்பு கொடுங்கள்.. என பதிவிட்டுள்ளார் டாம் ஹாலண்ட்.

டிரெய்லரில் செம கெமிஸ்ட்ரி
ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் படத்தின் டிரெய்லரில் டாம் ஹாலந்துக்கும் ஜெண்டயாவுக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது. ஜெண்டயா மற்றும் டாம் ஹாலண்ட் டேட்டிங் செய்வதாக ஏற்கனவே தகவல் பரவியது. ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங் மற்றும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஆகியவற்றில் இந்த ஜோடி இணைந்து நடித்தது.

காதலை உறுதிப்படுத்தவில்லை
இவர்கள் அடுத்ததாக ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். ஜென்டாயா மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் தங்களுக்கு இடையில் உள்ள காதல் உறவை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை. இருப்பினும் அவர்களின் ஜூலை முத்த போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது

டேட்டிங் வதந்திகளை மறுத்த ஜோடி
இந்த ஜோடி முதன்முதலில் ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங் 2016 இல் சந்தித்தது. 2017 ல் ஸ்பைடர் மேன் பிரஸ் டூரின் போது நடிகர்கள் அற்புதமான வேதியியலைப் பகிர்ந்து கொண்டதாக வதந்திகள் பரவியது. அந்த நேரத்தில், அவர்கள் டேட்டிங் வதந்திகளை மறுத்தனர். 2018 ஆம் ஆண்டில், ஹாலண்ட் ஜெண்டயாவின் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











