வந்துட்டான்யா… வந்துட்டான்யா… ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் டிரைலர் ரிலீஸ்!

கலிபோர்னியா : Spider man : No way Home' திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சூப்பர் ஹீரோ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' படத்தில் ஜெண்டயா, மரிசா டோமி, டோனி ரிவோலோரி மற்றும் ஜேக்கப் படாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் டிசம்பர் 17ந் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.

 சோனி, மார்வெல்

சோனி, மார்வெல்

சோனி மற்றும் மார்வெல் நிறுவனம் இணைந்து தயாரித்த 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இக்கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதையடுத்து, காப்புரிமை தொடர்பாக சோனி மற்றும் மார்வெல் இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருநிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டன. இந்த தகவல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்தையில் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்தன.

டாக்டர் ஆக்டோபஸ்

டாக்டர் ஆக்டோபஸ்

'Spider man : No way Home' திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் இப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியான முதல் டிரைலரில் திடீரென தோற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அனைத்து வில்லன்களும்

அனைத்து வில்லன்களும்

இந்நிலையில் இத்திரைப்படத்தின் 2வது டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பைடர்மேனின் பரம எதிரிகளான ஆக்டோபஸ், சாண்ட் மேன், எலக்ட்ரோ, கோப்ளின் உள்ளிட்ட அனைத்து ஸ்பைடர்மேன் வில்லன்களும் இந்த ட்ரெய்லரில் தோன்றி உள்ளனர். டோபி மற்றும் கார்பீல்டு ஸ்பைடர்மேன்கள் குறித்த காட்சிகள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ட்ரெண்டிங்கில்

ட்ரெண்டிங்கில்

மார்வெல் நிறுவனம் இன்று காலை வெளியிட்ட இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த ட்ரெய்லர் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X