அண்ணாத்த நீ அந்த சைடு போ.. அக்ஷய் குமார் நீ இந்த சைடு போ.. பாக்ஸ் ஆபிஸில் ஸ்பைடர்மேன் தான் டாப்!
சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸையும் சேர்த்து ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் மற்றும் புஷ்பா ஆட்சி செய்யும் நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
உலகளவில் வசூல் சூறாவளி நடத்தி வரும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் இந்தியாவிலும் முதல் நாளில் ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்துள்ளது.
ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் முதல் வசூலாக 30 கோடி ரூபாய் வரை ஈட்டிய நிலையில், பாலிவுட் திரைப்படமான சூர்யவன்ஷி 26.29 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்
ஸ்பைடர்மேன் நோ டிக்கெட்ஸ் டு தியேட்டர் என டைட்டில் வைத்திருக்கலாம் அந்த அளவுக்கு உலகளவில் ஹவுஸ்ஃபுல் புக்கிங் உடன் படம் வேற லெவலில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒன்றுக்கு மூன்று ஸ்பைடர்மேன்களையும் மல்டி யூனிவர்ஸையும் பார்த்து ரசிகர்கள் புல்லரித்து போயுள்ளனர்.

முதல் நாள் வசூல்
ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிரைலரே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் தீயாக இருந்தது. கொரோனா, ஓமிக்ரான் என பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் வசூலில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் நாளில் மட்டும் 32.67 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர்ஸ்டாரை முந்திய ஸ்பைடி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியான அண்ணாத்த திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 32 கோடி ரூபாய் வசூல் உடன் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலை முந்தியிருக்கிறது.

பாலிவுட் படம்
பாலிவுட்டில் வெளியான அக்ஷய் குமாரின் அட்டகாசமான சூர்யவன்ஷி திரைப்படம் முதல் நாளில் 26.29 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில் அந்த படத்தின் வசூலையும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் முறியடித்தது பாலிவுட் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புஷ்பா வசூல்
அல்லு அர்ஜுனின் பான் இந்தியா திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ஸ்பைடர்மேன் நோ வேம் ஹோம் படத்தின் இந்திய வசூலை புஷ்பா திரைப்படம் முறியடிக்குமா? என்பதையும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் முதல் நாளில் 31.30 கோடி ரூபாயும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அதிகபட்சம் 53.10 கோடி ரூபாயும் வசூல் ஈட்டி உள்ளன.


Click it and Unblock the Notifications











