இந்தத் துப்பாக்கியைப் பார்த்திருக்கீங்களா இதுக்கு முன்னாடி...?!
லாஸ் ஏஞ்செலஸ்: ரிவால்வர் ரீட்டா பார்த்திருப்பீர்கள்.. கன் பைட் காஞ்சனாவைக் கூட பார்த்திருக்கிறோம்.. அதே போல இப்போது ஹாலிவுட்டில் ஒரு அதிரடி ஹீரோயின் 'கன் பிரா' துப்பாக்கியுடன் கிளம்பியுள்ளார்.
இவரிடமிருக்கும் துப்பாக்கியை கையில் எடுத்து, ஸ்டிரைக்கரை அழுத்தி சுட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. காரணம், துப்பாக்கி கையில் இரு்நதால்தானே,.. பிராவில்தான் இந்தத் துப்பாக்கி ஒளிந்திருக்கிறது.
பிராவில் ஒளிந்திருக்கிறது என்று கூட கூற முடியாது. துப்பாக்கியைத்தான் பிரா வடிவில் டிசைன் செய்து சோபியாவிடம் கொடுத்து அணிய விட்டுள்ளனர் மாச்செட் கில்ஸ் படத்துக்காக.

மயக்கும் மாய மோகினி
ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கும் படம்தான் மாசெட் கில்ஸ். இப்படத்தில் மயக்கும் சாகசக்காரியாக, லேடி டெஸ்டமோனா என்ற வேடத்தில் வருகிறார் 39 வயதான சோபியா.

போஸ்டரில் பிரளயம்
இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில்தான் வித்தியாசமான இந்தத் துப்பாக்கியுடன் கலக்கலாக காட்சி தருகிறார் சோபியா.

எல்லாப் பக்கம் டுமீல் டுமீல்
இந்த போஸ்டரில் சோபியா தனது மேலாடைக்கு மேல் பிரா போல ஒன்றை அணிந்துள்ளார். பிராவின் இரு முனைகளும் துப்பாக்கி போல செயல்படுகிறது. அதாவது புல்லட்களை சரமாரியாக துப்பித் தள்ளுகிறது. சரமாரியாக நாலாபுறமும் சுட்டு நெருப்பை உமிழ்வது போல அந்த பிரா காட்சி தருகிறது.

செக்ஸி அன்ட் டேஞ்சரஸ்
இந்த போஸ் பார்க்க செக்ஸியாகவும் இருக்கிறது, அதேசமயம் அதிரடியாகவும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ப்யூட்டியையும், பயங்கரத்தையும் காட்ட நினைத்து இப்படி ஒரு டிசைனை செய்துள்ளார்கள் போலத் தெரிகிறது.

கன் பிரா புதுசல்ல
ஆனால் இப்படி நெருப்பை உமிழும் பிரா மாடல் என்பது புதிதல்ல. ஏற்கனவே 1967ல் வெளியான தி ஆம்புஷர்ஸ் என்ற படத்தில் வெற்று மார்பில் பிரா அணிந்து, அது சுடுவது போல சித்தரித்து கலக்கியிருப்பார்கள்.

காலில் துப்பாக்கி
இதே ரோட்ரிக்ஸ் 2007ல் தான் இயக்கிய பிளானட் டெர்ரர் என்ற படத்தில் நாயகி ரோஸ் மெக்கோவனுக்கு ஒரு காலுக்குப் பதில் துப்பாக்கியைப் பொருத்தி பயமுறுத்தியிருப்பார்.

செப்டம்பரில் ரிலீஸ்
அதிரடி காட்சிகள் நிரம்பிய மாச்செட் கில்ஸ் செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











