»   »  எதிர்ப்பார்ப்பைக் கிளறும் ஸ்டார் வார்ஸ் 7- புதிய தகவல்கள்

எதிர்ப்பார்ப்பைக் கிளறும் ஸ்டார் வார்ஸ் 7- புதிய தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஸ்டார் வார்ஸ் இந்த ஒரு வார்த்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. ஸ்டார் வார்ஸ் என்ற பெயரில் இதுவரை 6 பாகங்கள் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்து படா வசூல் பெற்றப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இந்த வருடத்தின் கடைசியில் டிசம்பர் மாதம் 18 ம் தேதி ஸ்டார் வார்ஸ் படங்களின் ஏழாம் பாகமான தி போர்ஸ் அவேகன்ஸ் வெளியாகவுள்ளது. இது மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தும் என்று இப்பொழுதே கணித்து வருகின்றனர், ஹாலிவுட்டின் கருத்துக் கணிப்பு நிபுணர்கள்.

ஏற்கனவே படத்தின் இரண்டு ட்ரைலர்கள் வெளிவந்து கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக மேலும் பல விஷயங்களைச் செய்து வருகின்றனர் படக்குழுவினர்.

என்ன மாதிரியான விஷயங்களைப் புதிதாக படத்தில் சேர்த்திருக்கின்றனர் என்று பார்க்கலாம்.

ஸ்டார் வார்ஸ் கதை

ஸ்டார் வார்ஸ் கதை

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்களுக்கும், விண்வெளியில் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் ஆதிக்கப் போட்டிதான் கதை. அதாவது நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்று இரு தரப்பினரும் போட்டுக் கொள்ளும் சண்டைதான் படத்தின் கதை. இதுவரை இந்த ஒரே விஷயத்தை வைத்து 6 பாகங்களை எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கி விட்டனர்.

தி போர்ஸ் அவேகன்ஸ்

தி போர்ஸ் அவேகன்ஸ்

ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களின் ஏழாவது பாகமாக தி போர்ஸ் அவேகன்ஸ் திரைப்படம் இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகிறது. வேற்று கிரகம் என்ற ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாகத்திலும் ஸ்டார் வார்ஸ் போகும் உயரம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. படத்தை ஜே.ஜே.ஆப்ராம்ஸ் இயக்கியுள்ளார்.

மாறிய தயாரிப்பு நிறுவனம்

மாறிய தயாரிப்பு நிறுவனம்

இதுவரை வெளியான ஸ்டார் வார்ஸ் படங்களின் 6 பாகங்களையும், ஸ்டார் வார்ஸ் கதைகளின் இயக்குநர் லூகாஸ் தனது லூகாஸ் பிலிம்ஸ் மூலமாக தயாரித்து இருந்தார். தற்போது டிஸ்னி நிறுவனத்தின் கைகளில் லூகாஸ் நிறுவனம் இருப்பதால், டிஸ்னியே இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்கிறது.

தரம் குறையாது

தரம் குறையாது

படத்தைத் தயாரிக்கும் டிஸ்னி நிறுவனம் படத்தை டிஸ்னி தயாரிப்பதால், ஸ்டார் வார்ஸ் படங்களின் தரம் மற்றும் தாக்கம் குறைந்து விடும் என்று யாரும் நினைக்க வேண்டாம் படத்தின் கதை இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் தான் என்று விளம்பரப்படுத்தி இருக்கிறது.

இந்திய மதிப்பில் 1400கோடி

இந்திய மதிப்பில் 1400கோடி

இந்திய மதிப்பில் சுமார் 1400 ரூபாய் செலவில் ஸ்டார் வார்ஸின் 7 வது பாகமான தி போர்ஸ் அவேகன்ஸ் படம் தயாராகி வருகிறது. படமானது 3D யிலும் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தக் காத்திருக்கிறது.

ஓய்ந்தது சண்டை

ஓய்ந்தது சண்டை

'அவெஞ்சர்ஸ்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் ஓய்ந்த நிலையில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தனது 'ஸ்டார் வார்ஸ்' படத்தின் மீது ஆல் கேமராவையும் போகஸ் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார் வார்ஸ் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளது.

நடிக, நடிகையர்கள்

நடிக, நடிகையர்கள்

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே ஜான் போயேகா, டெய்சி ரிட்லி, ஆடம் டிரைவர், ஆஸ்கர் இசாக், ஹாரிசன் போர்ட், மார்க் ஹிமில் போன்ற ஏராளாமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

புதிதாக இணைந்துள்ள இரு நடிகர்கள்

புதிதாக இணைந்துள்ள இரு நடிகர்கள்

தி போர்ஸ் அவேகன்ஸ் படத்தில் மேலும் இரண்டு ஹாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளனர். கிரேக் கிரேன்பெர்க் மற்றும் ரஷ் ஹவர், எக்ஸ் மேன் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கென் லேங் ஆகியோர் தான் அந்த இருவர்.

English summary
'Star Wars' 7 The Force Awakens" Character Update, The Following Holly Wood Actors Greg Grunberg and Ken Leung Will Reportedly Join The Cast List Of Upcoming Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil