ஸ்டார் வார்ஸ் பட நடிகர் பீட்டர் மேஹ்யூ மரணம்: ரசிகர்கள் இரங்கல்
டெக்சாஸ்: ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்கா கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.
ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்காவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பீட்டர் மேஹ்யூ(74). அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பீட்டர் மரணம் அடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் நேற்று அறிவித்துள்ளனர். ஆனால் அவரின் மரணத்திற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
பீட்டர் செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தாராம். பீட்டரின் மரணம் குறித்து அறிந்த ரசிகர்களும், ஸ்டார் வார்ஸ் படக்குழுவினரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் பிறந்த பீட்டரின் தந்தை ஒரு போலீஸ்காரர். லண்டனில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக இருந்த பீட்டரை படத் தயாரிப்பாளர் சார்லஸ் ஷ்னீர் பார்த்து படத்தில் நடிக்க வைத்தார்.
பீட்டர் முதன் முதலாக சிந்துபாத் அன்ட் தி ஐ ஆப் தி டைகர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு 1977ம் ஆண்டு ரிலீஸான ஸ்டார் வார்ஸ் படத்தில் ஹான் சோலோவின் நண்பராகவும், துணை விமானியாகவும் நடித்து பிரபலமானார் பீட்டர்.


Click it and Unblock the Notifications











