டிக்கெட் முன்பதிவில் விண்ணைத் தொட்டது 'தி போர்ஸ் அவேக்கன்ஸ்'

By Manjula

லாஸ் ஏஞ்செல்ஸ்: தி போர்ஸ் அவெக்கன்ஸ் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை இதுதான் இன்றைய தலையாய மற்றும் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது.

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படங்களில் முதன்மையான இடம் தி போர்ஸ் அவெக்கன்ஸ் படத்திற்கு உண்டு.

ஸ்டார் வார்ஸின் இதற்கு முந்தைய படங்கள் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றவை அந்த வகையில் இந்தப் படம் முந்தைய படங்களின் வரலாற்றை கண்டிப்பாக முறியடிக்கும் என்று படம் தொடங்கும்போதே முன்னணி விமர்சகர்கள் ஆரூடம் சொல்லியிருந்தனர்.

ஸ்டார் வார்ஸ்

ஸ்டார் வார்ஸ்

ஸ்டார் வார்ஸின் முந்தைய 6 படங்களும் உலகம் முழுவதும் வசூல் மழையைப் பொழிந்தவை. அதாவது இந்தப் படங்கள் வெளியானால் உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழாக்களாக மாற்றி விடுவார்கள், அந்த அளவிற்கு இந்தப் படத்திற்க்கு மவுசு இருக்கிறது.

3 வது டிரெய்லர்

3 வது டிரெய்லர்

இந்தப் படத்தின் 3 வது டிரெய்லர் சமீபத்தில் வெளியானது, வெளியான ஒரே நாளில் இதுவரை இந்த டிரெய்லரை யூ டியூபில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் இந்த டிரெய்லர் வெளியான போது ஒரு நிமிடத்திற்கு 17, ௦௦௦ பேர் இந்த டிரெய்லரைப் பற்றி ட்வீட் செய்திருக்கின்றனர். அதே போன்று டிரெய்லர் வெளியான 12 மணி நேரத்திற்கு சுமார் 11 லட்சம் பேர் இந்த டிரெய்லர் குறித்து பேசி மகிழ்ந்திருக்கின்றனர்.

கால்பந்து

கால்பந்து

கடந்த திங்களன்று கால்பந்து போட்டிகளுக்கு நடுவே இந்த டிரெய்லரை ஒளிபரப்பியது, படத்தின் டிக்கெட் விற்பனைக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த சமயத்தில் சுமார் 1 கோடியே 59 லட்சம் பேர் இந்த டிரெய்லரை கண்டு ரசித்திருக்கின்றனர்.

தி போர்ஸ் அவெக்கன்ஸ்

தி போர்ஸ் அவெக்கன்ஸ்

அந்த வகையில் இந்த வரிசையில் 7 வது படமாக உருவாகி வருகிறது தி போர்ஸ் அவேக்கன்ஸ், 2௦15 டிசம்பர் மாதம் 18ம் தேதி ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமையில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. ஆனால் இதற்கு ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வம் இருக்கிறதே அதனை எழுத்தில் வடிக்க முடியாது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

இந்தப் படத்தின் டிக்கெட் முன் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் சுமார் 95% டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. எவ்வளவு விற்பனை என்பதை டிக்கெட் முன்பதிவு நிறுவனமான பாண்டங்கோ வெளியிட மறுத்திருக்கிறது. அதே நேரம் 2௦11 ல் வெளியான தி ஹங்ஹர்ஸ் கேம் படத்தின் முன்பதிவு வரலாற்றை விட 8 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்திருக்கிறது.

ரசிகர்களின் கோபம்

ரசிகர்களின் கோபம்

முன்பதிவு தொடங்கியதை அறிந்த ரசிகர்கள அலைகடலென திரண்டு ஆன்லைனில் பதிவு செய்ய வந்திருக்கின்றனர், ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் தாங்கள் விரக்தியும், கோபமும் அடைந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

புதிய முகங்கள்

புதிய முகங்கள்

மூத்த நடிகர்கள் ஹாரிசன் போர்ட் மற்றும் கேரி பிஷேர் ஆகியோருடன் டெய்சி ரிட்லி, ஆடம் டிரைவர் மற்றும் ஜான் போயேகா போன்ற புதுமுகங்களும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X