twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி'.. இந்தியாவில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், ஸ்க்ரீன் ரைட்டர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

    ஜுராசிக் பார்க், ஜாஸ், கேட்ச் மீ இஃப் யூ கேன் மற்றும் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

    பிரபல பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்! பிரபல பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்!

    வெஸ்ட் சைட் ஸ்டோரி

    வெஸ்ட் சைட் ஸ்டோரி

    இந்நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது வரவிருக்கும் திரைப்படமான வெஸ்ட் சைட் ஸ்டோரியை இந்திய திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 16ஆம் தேதியான நேற்று வெளியிட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

    1957 பிராட்வே இசையின் தழுவல்

    1957 பிராட்வே இசையின் தழுவல்

    இந்தப் படம் 1957 பிராட்வே இசையின் தழுவலாகும். இந்தப் படத்தில் அன்செல் எல்கோர்ட், ரேச்சல் ஜெக்லர், அரியானா டிபோஸ் மற்றும் டேவிட் அல்வாரெஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் 2014ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. ஆனால் நடிகர்கள் தேர்வு செய்யும் பணி கடந்த 2018ஆம் ஆண்டுதான் தொடங்கியது.

    நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி

    நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி

    மேலும் படப்பிடிப்பு பணிகள் 2019ம் ஆண்டு தொடங்கியது. இரண்டு மாதங்களிலேயே இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. வெஸ்ட் சைட் ஸ்டோரி படம் முழுக்க நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 20 சென்ட்சூரி ஸ்டுடியோ நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

     இந்தியாவில் வரும் டிசம்பர் 10

    இந்தியாவில் வரும் டிசம்பர் 10

    கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெஸ்ட் சைட் ஸ்டோரி திரைப்படம் அமெரிக்காவில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் டிசம்பர் 10ஆம் தேதியே இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இசையை மையப்படுத்தி ரொமான்டிக் படம்

    இசையை மையப்படுத்தி ரொமான்டிக் படம்

    இந்தப் படம் இசையை மையப்படுத்திய ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற மூத்த நடிகை ரீட்டா மோரேனோ இந்த படத்தில் ஒரு புதிய பாத்திரத்தில் நடித்துள்ளார். டோனி குஷ்னர் எழுதிய, வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டி மாக்கோஸ்கோ கிரிகர் மற்றும் கெவின் மெக்கல்லம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

    English summary
    Stevan Spielberg's west side story will be released in India. On December 10th West side story will be released in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X