ஆபாச படத்துல நடிக்கப் போறேன்னு சொன்னாரே... பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் மகள் மைக்கேலா திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகப்புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர், ஜூராஸிக் பார்க், ஹுக், கேச் மீ இஃப் யூ கேன், வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ், அட்வெஞ்சர்ஸ் ஆப் டின் டின் உட்பட பல ஆச்சரியமான படங்களை இயக்கியுள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஸ்பீல்பெர்க், ஆறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் 23 வயது மைக்கேலா.

ஆபாச படங்களில்

ஆபாச படங்களில்

இவர் கடந்த சில நாட்களுக்கு முன், ஆபாச படங்களில் நடித்து, அதை தயாரிக்கப் போவதாக தெரிவித்து இருந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 'தினமும் வேலை செய்து சோர்வடைந்ததுதான் மிச்சம். திருப்தி கிடைக்கவில்லை. எனவே இதுபோன்ற வீடியோ தயாரிக்க விரும்புகிறேன். இதன்மூலம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

சுகர் ஸ்டார்

சுகர் ஸ்டார்

இதுவே தனக்கு விருப்பமான துறை என்றும், இதற்கு தனது தந்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். சுகர் ஸ்டார் என்று தனக்கு திரை பெயர் வைத்திருக்கும் இவரது அதிர்ச்சி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இதை வரவேற்றுள்ளார். 'மகள் ஆபாச பட நடிகையாக மாறுவதற்கு அவர் தந்தையே சம்மதித்து இருக்கிறார். வேறெந்த ஒப்புதலும் இனி அவருக்குத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.

வருங்கால கணவர்

வருங்கால கணவர்

இந்நிலையில், ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா, குடும்ப வன்முறை காரணமாக நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுக்கப்பட்டார். மைக்கேலா தனது வருங்கால கணவர் ஜக் பன்கோவ் (47) உடன் வசித்து வருகிறார். இருவரும் சேர்ந்து இருப்பது போல அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

உண்மைதான்

உண்மைதான்

மைக்கேலா கைது செய்யப்பட்டது பற்றி ஜக் பன்கோவ் கூறும்போது, அது உண்மைதான். ஆனால், தவறான புரிதலால் இந்த கைது சம்பவம் நடந்துவிட்டது. யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறியுள்ளார். அதோடு உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X