twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் மேன் பட இயக்குனர் ரிச்சர் டோனர் காலமானார்!

    |

    அமெரிக்கா : சூப்பர் மேன் பட இயக்குனர் ரிச்சர்ட் டோனர் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

    ரிச்சர்ட் மரணத்தை அவரது மனைவி லாரன் ஷுலர் டோனர் உறுதிப்படுத்தினார்.

    டோனர் காலமானதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவரின் பழைய படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிடித்தமான திரைப்படம்

    பிடித்தமான திரைப்படம்

    80ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படம் என்றால் சூப்பர் மேன் திரைப்படம் தான். சூப்பர் மேன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பூகம்பத்தால் பூமி அப்படியே பிளந்து இரண்டாகும். மக்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடும் போது.... பிளந்து கிடந்த பூமியை சரி செய்து அப்படியே அலேக்காக தூக்கி பூமியை சரி செய்து மக்களை காப்பாற்றுவார். இந்த காட்சி என்றைக்கும் சூப்பர் மேன் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள்.

    நியூயார்க்கில் பிறந்தார்

    நியூயார்க்கில் பிறந்தார்

    நியூயார்க்கில் பிறந்த டோனர் 1960 களின் முற்பகுதியில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தி ட்விலைட் சோன் மற்றும் தி மேன் ஃப்ரம் மாமா போன்ற பல தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் வெளியான, தி ஓமன் அவரது புகழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    புகழின் உச்சியில்

    புகழின் உச்சியில்

    1978 இன் சூப்பர்மேன் திரைப்படம் வெளியாகி அவரை புகழின் உச்சியில் ஏற்றியது. பட்டி தொட்டி எங்கும் அவரின் புகைப்படங்கள் காணப்பட்டன. சூப்பர் மேன் படைப்புக்காக அவர் நவீன சூப்பர் ஹீரோக்களின் தந்தையாகவே கருதப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான கெட் ஸ்மார்ட், பெர்ரி மேசன், கில்லிகன்ஸ் தீவு மற்றும் தி ட்விலைட் சோன் ஆகியவற்றின் அத்தியாயங்களையும் அவர் இயக்கியுள்ளார்,

    ரிச்சர் டோனர் மரணம்

    ரிச்சர் டோனர் மரணம்

    இந்நிலையில், சூப்பர் மேன் என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியவர் ரிச்சர் டோனர் திங்கட்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 91. அவர் மரணமடைந்த செய்தியை அவரது மனைவி லாரன் ஷுலர் டோனர் முறைப்படி உறுதிப்படுத்தினார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறினார்.

    அஞ்சலி

    அஞ்சலி

    ரிச்சர்ட் டோனர் காலமானதைத் தொடர்ந்து அவரது தீவிர ரசிகர்கள் டோனரின் பழைய படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Read more about: hollywood
    English summary
    superman director richard donner passed away
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X