For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இவர் தான் ரியல் சூப்பர்ஸ்டார்.. ரசிகருக்கு சொந்த காரையே சர்ப்ரைஸாக பரிசாக அளித்த பிரபல நடிகர்!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ராக் என ரெஸ்லிங் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தனது டிரக் காரை ரசிகர் ஒருவருக்கு பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  WWE மல்யுத்த போட்டியில் கலக்கிய தி ராக் ஹாலிவுட் படங்களில் வசூல் மன்னனாக அசத்தி வருகிறார்.

  சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ரெட் நோட்டீஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த போது இப்படியொரு சர்ப்ரைஸ் கிஃப்டை ரசிகர் ஒருவருக்கு ராக் அளிக்க என்ன காரணம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

  11 எம்மி விருதுகளை குவித்த தி க்ரவுன்... சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்றார் ஒலிவியா கோல்மென்!11 எம்மி விருதுகளை குவித்த தி க்ரவுன்... சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்றார் ஒலிவியா கோல்மென்!

  தி ராக்

  தி ராக்

  சின்ன வயதில் டிரம்ப் கார்டு விளையாடும் போது நம்பர் ஒன் ரேங்க் வைத்திருக்கும் தி ராக் கார்டு வைத்திருப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். WWE நிகழ்ச்சியை ஏகப்பட்ட 90ஸ் கிட்ஸ் பார்க்க காரணமும் அவர் தான். ரெஸ்லிங்கில் கலக்கிய ராக்கின் நிஜ பெயர் டுவைன் ஜான்சன். ஹாலிவுட் படங்களில் டுவைன் ஜான்சனாகவே கலக்கி வருகிறார்.

  ஹாலிவுட் வசூல் மன்னன்

  ஹாலிவுட் வசூல் மன்னன்

  ஹாலிவுட்டில் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து உலகளவில் வசூலை ஈட்டி வருகிறார் டுவைன் ஜான்சன். மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஸ்கார்ப்பியன் கிங்காக உலக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான டுவைன் ஜான்சன் சமீபத்தில் வெளியான ஜங்கிள் க்ரூஸ், ரெட் நோட்டீஸ் என ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

  ரெட் நோட்டீஸ்

  ரெட் நோட்டீஸ்

  இயக்குநர் ராசான் மார்ஷல் தர்பர் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளியாகி உள்ள ரெட் நோட்டீஸ் திரைப்படத்தில் டுவைன் ஜான்சன், கால் கடோட் மற்றும் ரியான் ரினால்ட்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். உலகளவில் அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

  சர்ப்ரைஸ் விசிட்

  சர்ப்ரைஸ் விசிட்

  அமெரிக்காவில் திரையரங்கு ஒன்றில் ரெட் நோட்டீஸ் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த திரையரங்குக்கு தனது டிரக் காரில் வந்து இறங்கிய டுவைன் ஜான்சன் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். அதிலும், ஒரு ரசிகருக்கு அவர் கொடுத்த சர்ப்ரைஸ் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

  டிரக் பரிசு

  தனது சொந்த டிரக் காரை தனது ரசிகரான ஆஸ்கர் ரோட்ரிகஸ் என்பவருக்கு படம் முடிந்து வெளியே வந்ததும் சர்ப்ரைஸ் ஆக டுவைன் ஜான்சன் பரிசளித்ததை பார்த்து அவர் நெகிழ்ந்து போய் கட்டிப் பிடித்து அழுதார். டுவைன் ஜான்சனின் இந்த பரிசு செய்தியை அறிந்த ரசிகர்கள் இணையத்தில் அவரை புகழ்ந்து தள்ளி விட்டனர்.

  எதற்காக இந்த பரிசு?

  எதற்காக இந்த பரிசு?

  ஆஸ்கர் ரோட்ரிகஸ் தொடர்ந்து மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அவரது மனித நேயம் டுவைன் ஜான்சனை வெகுவாக கவர்ந்த நிலையில், உங்களின் மனித நேயத்துக்காக தான் இந்த பரிசு எனக் கூறி தனது டிரக் காரை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற பெண்களுக்கு தினமும் உணவு வழங்குவது, 75 வயதாகும் உங்கள் தாயாரை கனிவோடு பாதுகாத்து கொள்வது பர்சனல் டிரைனராக பணியாற்றும் நீங்க பல்வேறு மக்களுக்கு உங்கள் சக்திக்கு மீறிய உதவிகளை செய்து வருவதை கண்டு வியந்தேன் என ராக் அந்த ரசிகரை பாராட்டி பரிசளித்துள்ளார்.

  English summary
  Actor Dwayne Johnson gave a surprise gift to his fan when his Red Notice movie running in a theater. His fan Oscar Rodriguez do several social service with his mankind is the main reason for this great gift.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X