ஆண்களை இவ்வளவு கேவலமானவர்களா நினைச்சுட்டாங்களே.. நடிகை குளித்த தண்ணீரில் ஆண்களுக்கு சோப்!
அமெரிக்கா: பொதுவாகவே உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விடுவதும், அதை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் வாங்குவது குறித்து பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த முறை வளர்ச்சி அடைந்த நாடு, வல்லரசு நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சோப் என்றும், அது ஆண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது என்று விளம்பரம் செய்து வருகிறார்கள்.
நடிகை குளித்த தண்ணீரைக் கொண்டு இந்த சோப் உருவாக்கப்படுவதால் இதனை அழுக்கு நீர் சோப் என்று தாராளமாக குறிப்பிடலாம். ஆனால் இந்த சோப்பை Dr.Squatch என்ற பிரபல நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த சோப் தொடர்பான அறிவிப்பை Dr.Squatch நிறுவனமும் நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சோப்பிற்கு Sydney's Bathwater Bliss என பெயரிட்டுள்ளார்கள். மேலும் இந்த சோப் நடிகை சிட்னி குளித்த நீரைக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி குறிப்பிடப்பட்டிருப்பது தான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தொடக்க காலத்தில் நாட்டின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் அவர்களுக்காக அமைக்கப்பட்ட மியூசியத்தில் வைக்கப்பட்டது. ஆனாலும், சில பொருட்கள் பொதுமக்களுக்கு ஏலம் விடப்பட்டது. இதே போக்கு பிரபலங்களின் பொருட்களுக்கும் பின்பற்றப்பட்டது.
அன்பின் வெளிப்பாடு: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சாக்ஸ், கோட், ஷூ, தொப்பி என அனைத்துமே ஏலத்திற்கு விடப்பட்டது, அவை பல மில்லியன்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இவையெல்லாம் தங்களின் பிரியமானவர்களின் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவர்களின் நினைவாக, அவர்கள் பயன்படுத்திய பொருளை ரசிகர்கள் வாங்குகிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்கும்போது நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீரைக் கொண்டு சோப்பு உருவாக்கியுள்ளோம் என்று தெரிவித்திருப்பது மட்டும் இல்லாமல், இந்த சோப் பிரத்யோகமாக ஆண்களுக்கானது என்று அவர்கள் தெரிவித்திருப்பது மிகவும் அருவருக்கத்தக்க ஒன்றாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
சில்க் ஸ்மிதா: 80களின் இறுதியில் தொடங்கி சில்க் என்ற நடிகை மறையும் வரை தமிழ் சினிமாவில் இருந்த எழுதப்படாத விதியாக இருந்தது. படத்தில் கதாநாயகன் கதாநாயகி என யார் வேண்டுமானாலும் இருக்கட்டும் படத்தில் ஒரு பாட்டுக்காவது சில்க் நடனமாட வேண்டும் என்று இருந்தது. காரணம் சில்க் என்ற நடிகையை கவர்ச்சி கடையாக மாற்றியது தமிழ் சினிமா. இன்றைக்கு சில்க் குறித்து பலரும் அறியாத தகவலகளை இன்னும் சொல்லப்போனால் அவர் குறித்த பல வியக்க வைக்கும் தகவல்களை அவரது பிறந்த நாளின் போது, நினைவு நாளின் போதும் பகிர்ந்து வருகிறார்கள். ஆண்களை தியேட்டருக்குள் அழைத்து வர, சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி கடையாக மாற்றிய தமிழ் சினிமாவின் செயல் மெச்சத்தகுதந்தது கிடையாது. இதைப் பார்க்கும்போது தமிழ் சினிமா ஆண்களை எவ்வளவு மலிவானவர்களாக எடை போட்டுள்ளது என்பது புலப்படுகிறது.

குளித்த நீரில் சோப்: அதேபோலத்தான், இந்தியாவை விட பல மடங்கு வளர்ந்த நாடு, அறிவிலும் ஆற்றலிலும் முன்னேறிய நாடு எனச் சொல்லும் அமெரிக்காவில் ஒரு நடிகை குளித்த நீரைக் கொண்டு சோப்பு தயாரித்து விற்பனை செய்கிறார்கள் என விளம்பரம் படுத்துகிறார்கள் என்பது கேலிக்கூத்தான விஷயம்தான். அதே நேரத்தில் இது போன்ற விஷயத்தைப் பார்க்கும்போது ஒரு நாடு எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் ஆண்களை சபலப்படுத்தி அதை வியாபாராமாக எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்பது தெளிவாகிறது. இந்த சோப் வரும் 6ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது என்றும் லிமிடெட் எடிஷன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது, பிதாமகன் படத்தில் ஓடும் ரயிலில் சூர்யா விற்பனை செய்வாரே, "ஆலயமணி படத்தில் நம்ம கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா... மோந்து பாருண்ணே சரோஜா தேவி வாடை வரும்" என்ற காமெடியையும் சேர்த்து ஞாபகப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications











