நிர்வாணமாக நடிப்பதை நிறுத்த மாட்டேன்.. ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்த சிட்னி ஸ்வீனி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஜோம்பி மாஸ் டிஸ்ட்ரக்‌ஷன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த சிட்னி ஸ்வீனி பல படங்களில் பாப்பாவாக நடித்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பருவ மங்கையாக Euphoria டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தனக்கு ஸ்லேவ் ஆக்கி வருகிறார்.

ஹாலிவுட் படங்கள், டிவி தொடர்கள், வெப்சீரிஸ் என கடந்த சில ஆண்டுகளில் வெளுத்து வாங்கி வரும் சிட்னி ஸ்வீனி 26 வயதிலேயே ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். அவர் இந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காரணமே தாராளமாக ஆடைகளை துறந்து பிறந்த மேனியாக அவர் நடிப்பது தான்.

Sydney Sweeney Hollywood Euphoria


இந்நிலையில், சமீபத்தில், இதுதொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்ட நிலையில், சிட்னி ஸ்வீனி அளித்த பதில் தான் தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.

அழகின் உச்சம்: எனி ஒன் பட் யூ, மேடம் வெப், இம்மாகுலேட் என சிட்னி ஸ்வீனி நடித்த ஹாலிவுட் படங்கள் எல்லாமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளன. அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஹாலிவுட் ரசிகர்களின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக சிட்னி ஸ்வீனி மாறியுள்ளார். மார்கட் ராபிக்கு இருந்தளவுக்கு கிரேஸ் தற்போது இவருக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் உள்ளதாக கூறுகின்றனர். அந்தளவுக்கு அழகின் உச்சமாக உள்ள சிட்னி ஸ்வீனையை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த காட்சிகள் கன்ஃபார்ம்: சிட்னி ஸ்வீனி நடித்தாலே படங்களாக இருந்தாலும் சரி, டிவி தொடர்களாக இருந்தாலும் சரி நிச்சயம் ஆடைகளை கழட்டிப் போட்டு விட்டு படுக்கையறை காட்சிகள் இருப்பது உறுதி என்கிற அளவுக்கு மோசமான பெயரும் சிட்னி ஸ்வீனிக்கு வந்து விட்டது. சமீபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் சிட்னி ஸ்வீனி.

நிர்வாணமாக நடிப்பதை நிறுத்த மாட்டேன்: அந்த கேள்விக்கு பதிலளித்த சிட்னி ஸ்வீனி, நான் எப்போதும் என்னுடைய இயக்குநர்களை நம்புகிறேன். அவர்கள் கதைக்குத் தேவையான காட்சிகளைத் தான் வைக்கின்றனர். கண்டிப்பாக ஹாலிவுட்டில் நிர்வாணமாக நடிக்க நான் வெட்கமே படவில்லை. தொடர்ந்து நிர்வாணமாக நடிப்பேன். அதை நான் நிறுத்தப் போவதில்லை என பதில் அளித்துள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்: சிட்னி ஸ்வீனியின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அதை அதிகளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ஹாலிவுட்டில் சில நடிகைகள் நிர்வாணக் காட்சிகளுக்கு பாடி டபுள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில நடிகைகள் ரசிகர்களுக்காகவும், கதையின் தேவைக்காகவும் ஆடைகளை துறந்து படு போல்டாக நடிப்பதை தவறாக கருதாமல் தொடர்ந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட், கோலிவுட்டிலும் சில நடிகைகள் துணிச்சலாக இதுபோல நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X