உள்ளாடையே போடலயே பாஸ்.. தனுஷ் ஜோடியா இவர்தான் நடிக்கப்போறாரா.. 'ரெயின் ரெயின் கோ அவே' கேப்ஷன் வேற!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச அளவில் ரசிகர்களை தனது கட்டழகால் கட்டிப்போட்டு வரும் சிட்னி ஸ்வீனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் ஸ்வெட்டர் அணிந்துக் கொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
நடிகர் தனுஷ் அடுத்ததாக ஸ்ட்ரீட் ஃபைட்டர் எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தில் சிட்னி ஸ்வீனி தான் அவருக்கு ஜோடி என ஹாலிவுட் வட்டாரத்திலேயே அனல் பறக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி நிர்வாணமாகவே நடித்து ரசிகர்களை பதற வைத்த சிட்னி ஸ்வீனி தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்காக லேட்டஸ்ட் அனல் கிளப்பும் போட்டோக்களை அடுக்கியுள்ளார்.
27 வயசு இளம் புயல்: ஈஃபோரியா, இம்மாகுலேட், எனி ஒன் பட் யூ, மேடம் வெப், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் என இவர் நடித்த அத்தனை படைப்புகளுமே தரமான சம்பவம் தான். சினிமா மற்றும் ஓடிடி என சிக்ஸர் அடித்து வரும் சிட்னி ஸ்வீனி 27 வயது இளம் பாம்ஷெல்லாகவே மாறி ஹாலிவுட் ரசிகர்களை அகமகிழ வைத்து வருகிறார்.

தனுஷ் ஜோடியா நடிக்கப்போறாரா?: தி கிரேமேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் அடுத்ததாக சோனி தயாரிப்பில் உருவாகவுள்ள ஸ்ட்ரீட் ஃபைட்டர் எனும் படத்தில் பாக்ஸராக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிட்னி ஸ்வீனி நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இட்லி கடை, குபேரா என கைவசம் தனுஷுக்கு இந்தியாவிலேயே பல படங்கள் உள்ள நிலையில், அடுத்து ஹாலிவுட்டிலும் அசத்த காத்திருக்கிறார் என்கின்றனர். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாடி ஷேமிங்: சமீபத்தில், பிகினி உடையில் சிட்னி ஸ்வீனி வீட்டுக்கு வெளியே தென்பட்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவின. அதை பார்த்த பல நெட்டிசன்கள் சிட்னி ஸ்வீனியை கடுமையாக பாடி ஷேமிங் செய்து அசிங்கப்படுத்தினர். அதற்கு பதிலடி தரும் விதமாகத்தான் தற்போது டாப்லெஸ் போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
டாப்லெஸ் போட்டோக்கள்: உள்ளாடை அணியாமல் வெறும் ஸ்வெட்டர் அணிந்துக் கொண்டு தனது முன்னழகு தெரியும்படி சிட்னி ஸ்வீனி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "ரெயின் ரெயின் கோ அவே" என்கிற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். 23 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள சிட்னி ஸ்வீனி தனது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட டாப்லெஸ் போட்டோக்களுக்கு 27 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











