என்ன கஷ்டம்னு தெரியலையே? விமானம் போன்ற சொகுசு காரை விற்க, பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டாலோன் முடிவு!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் ஹீரோ தன்னிடம் உள்ள விமானம் போன்ற சொகுசு காரை விற்க முடிவு செய்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன். ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது ராம்போ, அதற்கு பின் அடுத்தடுத்த பாகங்களாக வெளியான படங்களுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள்.

சில்வெஸ்டர் ஸ்டாலோன்

சில்வெஸ்டர் ஸ்டாலோன்

ராக்கி, த எக்ஸ்பெண்டபிள் வரிசை படங்களில் நடித்து புகழ் பெற்ற சில்வெஸ்டர் ஸ்டாலோன், ராக்கி 2, ராக்கி 3, ஸ்டேயிங் அலைவ் உள்பட பல படங்களை தயாரித்து இயக்கியும் நடித்துள்ளார். இவரது படங்கள் அதிரடி சண்டை காட்சிகளுக்காகவே உலகம் முழுவதும் ஹிட்டாகின. கடைசியாக ராம்போ: த லாஸ்ட் பிளட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த அண்டு வெளியானது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இப்போது, Samaritan என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன், மீ டு புகார்கள் ஹாலிவுட்டில் எழுந்தபோது இவர் மீதும் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார். '1990-ம் ஆண்டு சில்வெஸ்டர் ஸ்டாலோன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் புகார் கூறியிருந்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரமாண்ட சொகுசு கார்

பிரமாண்ட சொகுசு கார்

74 வயதான சில்வெர்ஸ்டர் ஸ்டாலோன், தனியார் ஜெட் விமானத்தில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பிரமாண்ட சொகுசு கார் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த கருப்பு நிற காரில், மொபைல் இன்டர்நெட், சாய்ந்த இருக்கைகள், 43 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி டிவி உள்பட பல வசதிகள் உள்ளன. இதை 400000 அமெரிக்க டாலருக்கு வாங்கி இருந்தார் ஸ்டாலோன். இப்போது இந்த காரை விற்க இருக்கிறார். இதை 3,50,000 அமெரிக்க டாலர் போதுமாம்.

உலகிலேயே சிலரிடம்

உலகிலேயே சிலரிடம்

இது போன்ற கார் உலகிலேயே சிலரிடம் மட்டும்தான் இருக்கிறது. சிலிகான் வாலே, சியாட்டில் பைனான்சியர்கள், தொழிலதிபர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என சிலரிடம் மட்டுமே இருக்கும் இந்த காரை முதலில் வடிவமைத்தது, பெக்கர் ஆட்டோமோடிவ் டிசைன் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் தான் இப்போது இந்த சொகுசு காரின் விற்பனையையும் கவனித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X