இது இன்ஷெப்ஷனுக்கும் ஒரு படி மேல.. கிறிஸ்டோபர் நோலனின் கண்கட்டி வித்தை.. டிரெண்டாகும் TENET!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த மாதிரியான படங்கள் வெளியானால், மீண்டும் ரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களை நோக்கி படையெடுப்பார்கள்.

சின்னத்திரைகளில் கிறிஸ்டோபர் நோலனின் கண்கட்டி வித்தையை கண்டு ரசிக்க முடியாது என தற்போது வெளியாகி இருக்கும் TENET படத்தின் புது டிரைலரை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.

Inception, Interstellar படங்களை விட பல படி மேல் இந்த TENET கண்ணாமூச்சி வித்தை காட்டுவதாக உலகளவில் ரசிகர்கள் வியந்து வருகின்றனர். #ChristopherNolan என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

நல்லா உத்துப் பாருங்க

நல்லா உத்துப் பாருங்க

ஹாலிவுட்டின் மேஜிக் இயக்குநர் என போற்றப்படும் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பான TENET படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு உலகத்தில் Clockwiseல் நடக்கும் விஷயங்கள் இன்னொரு உலகத்தில் Anti Clockwiseல் நடக்கும் என்றும், Anti Clockwise உலகத்துக்கு TENET ஆக செல்லும் ஹீரோ சந்திக்கும் அனுபவங்களே படத்தின் கதை என டிரைலரை பார்த்த பலரும் கருதி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோபர் நோலன்

பேட்மேன் கதாபாத்திரத்தை கொண்டு பலரும் பலவிதமான படங்களை இயக்கி உள்ளனர். ஆனால், கிறிஸ்டோபர் நோலன், தன்னால் சூப்பர் ஹீரோ படத்தையும் வியக்கவைக்கும் அளவுக்கு ஸ்க்ரீன் பிளே செய்து அசத்த முடியும் என எடுத்த டார்க் நைட் படங்கள் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

விமானங்களே பிடிக்காதா

விமானங்களே பிடிக்காதா

கிறிஸ்டோபர் நோலன் குறித்த பல கதைகளும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும். இன்செப்ஷன் எனும் ஒருவரின் கனவு உலகத்தில் சென்று பல காரியங்களை செய்யும் குழப்பமான படத்தை எடுத்த கிறிஸ்டோபர் நோலனுக்கு விமானங்களே பிடிக்காது போல என ராட்டன் டோமேட்டோஸ் கலாய்த்திருக்கிறது. தனது எல்லா படத்திலும் இஷ்டத்துக்கு விமானங்களை பலி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நோலன் கேரக்டர்

நோலன் கேரக்டர்

டெனட் படத்தின் புதிய டிரைலரில் நடிகர் ராபர்ட் பாட்டின்சனின் நடிப்பு மற்றும் பாடி லாங்குவேஜ் அப்படியே கிறிஸ்டோபர் நோலனை உரித்து வைத்தது போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பார்க்கும் போது அப்படியே கிறிஸ்டோபர் நோலனை போலவே காட்சி தருகிறார் இந்த டிவிலைட் சாகா நாயகன்.

ரியல் தானோஸ்

ரியல் தானோஸ்

தானோஸ் கையில் இருக்கும் ஒவ்வொரு மந்திர கல்லுக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். அதே போல கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் படம் ரியாலிட்டியையும், பேட்மேன் பவரையும், மெமென்டோ மைண்டையும், பிரெஸ்டிஜ் ஆன்மாவையும், இண்டெர்ஸ்டெல்லார் ஆகாயத்தையும், டெனெட் டைமையும் மையமாக கொண்டு உருவாகிக்கி இருக்கிறார் என புகழ்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X