மே தின ஸ்பெஷல்... பிரமாண்டமாய் வெளியாகும் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2!
சென்னை: ஒரிஜினல் தமிழ்ப் படத்தை விட பிரமாண்டமாக இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 திரைப்படம்.
ஸ்பைடர்மேன் வரிசையில் கடந்த ஆண்டுகளில் 3 படங்கள் வெளியாகின. இப்போது அந்தப் படங்களை புதிய நடிகர்களை வைத்து ரீமேக் செய்து வருகின்றனர்.

தி அமேஸிங் ஸ்பைடர்மேன்
அந்த வரிசையில் இரு ஆண்டுகளுக்கு முன் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் வெளியானது.
இந்த ஆண்டு தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 இன்று வெளியாகியுள்ளது. உலகெங்கும் பல ஆயிரக்கணக்கான அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

207 அரங்குகள்
தமிழகத்தில் மட்டும் 207 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இவற்றில் 167 அரங்குகளில் இதன் தமிழ் வடிவம் வெளியாகிறது. சென்னையில் மட்டுமே 55 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பிரமாண்டமான தமிழ்ப் படங்களுக்குக் கூட சென்னையில் இத்தனை அரங்குகள் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐமேக்ஸ்
சென்னையில் இரண்டு ஐமேக்ஸ் திரையரங்குகள் உள்ளன. ஒன்று வடபழனி விஜயா மால். இன்னொன்று வேளச்சேரி பீனிக்ஸ் மால். இவற்றில் ஏதேனும் ஒன்றில் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு தியேட்டர்களுமே இன்னும் திறக்கப்படவில்லை. எனவே ஐமேக்ஸில் 3 டியில் ஸ்பைடர்மேனைப் பார்க்கும் வாய்ப்பு குட்டீஸ்களுக்கு வாய்க்கவில்லை!

தமிழ்ப் படங்கள்
இந்தப் படம் தவிர தமிழில் நீ எங்கே என் அன்பே, தாவணிக் காற்று ஆகிய படங்களும் இந்த மே தின ஸ்பெஷலாக வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











