கேட் உமனுடன் இணைந்து மிரட்ட வருகிறார் புதிய பேட்மேன்.. புதிய போஸ்டருடன் வெளியான ரிலீஸ் தேதி!

சென்னை: காமிக்ஸ் பிரியர்களிடமும் தல தளபதி சண்டை போல டிசி மற்றும் மார்வெல் இடையேயான மோதல்கள் உலகளவில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

Pugazh காதலி புகைப்படத்தை முதல் முறையாக Share செய்துள்ளார் | Cook With Comali Season 3

சமீப காலமாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என மார்வெலின் கை வேற லெவலில் உயர்ந்துள்ள நிலையில், டிசி ரசிகர்களை கொண்டாட வைக்க வருகிறது புதிய பேட்மேன் திரைப்படம்.

ட்விலைட் சாகா மற்றும் டெனெட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சன் இந்த முறை பேட்மேனாக மிரட்டப் போகிறார்.

அமுல் பேபி பேட்மேன்

அமுல் பேபி பேட்மேன்

கிறிஸ்டியன் பேல், பென் அஃப்லெக் என ஏகப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், புதிய பேட்மேனாக அமுல் பேபி ராபர்ட் பேட்டின்சன் டெரர் மோடுக்கு மாறியுள்ளார். ஹாரி பாட்டர் படத்தில் செடரிக் டிகோரி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் பேட்டின்சன் உலகளவில் ஹிட்டான ட்விலைட் சாகா வரிசை படங்களில் ரொமான்டிக் பாயாக நடித்திருப்பார்.

கிறிஸ்டோபர் நோலன் படத்தில்

கிறிஸ்டோபர் நோலன் படத்தில்

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ஆச்சர்யங்கள் நிறைந்த டெனெட் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்திருப்பார் ராபர்ட் பேட்டின்சன். டெனெட் படத்தில் ராபர்ட் பேட்டின்சனின் கதாபாத்திரமே ஒரு பெரிய புதிராகவும் அதற்கு ஏகப்பட்ட டிகோடிங்கும் சமூக வலைதளத்தில் பல ஹாலிவுட் ரிவ்யூவர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேட் உமனுடன் பேட்மேன்

கேட் உமனுடன் பேட்மேன்

விரைவில் பேட்மேன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பேட்மேன் மற்றும் கேட் உமன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு போஸ்டரில் பேட்மேன் மட்டுமே தனியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

கேட் உமனாக யார்

கேட் உமனாக யார்

அனா ஹாத்வே முதல் ஏகப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகைகளும் பேட்மேன் மாறும் போதெல்லாம் கேட் உமனாக நடித்து உள்ளனர். இந்நிலையில், ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ள இந்த புதிய படத்தில் கேட் உமனாக ஸோ கிராவிட்ஸ் எனும் அமெரிக்க நடிகை மற்றும் பாடகி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஃபென்டாஸ்டிக் பீஸ்ட், டைவர்ஜென்ட் உள்ளிட்ட பல பிரபல படங்களில் இவர் நடித்துள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

உலகளவில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல்கள் பல கோடி மக்களை பாதித்து வரும் நிலையில், வரும் மார்ச் மாதம் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் என ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிம துறையினர் நம்பி வருகின்றனர். பேட்மேன் படத்தையும் மார்ச் 4ம் தேதி இந்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எல்லாம் கொரோனா கையில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X