ஆஸ்கர் விழாவில் கவர்ச்சியில் அசத்திய நடிகைகள்! ரெட்கார்ப்பெட் 2019 ரீவைண்ட்.. இந்த ஆண்டு எப்படியோ?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா விருதுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதன் ரெட் கார்ப்பெட் அணிவகுப்பும் உலகளவில் பிரபலமானது.
ஹாலிவுட் நடிகைகள் கண்கவர் கவர்ச்சி உடைகளில் ஆஸ்கர் ரெட்கார்ப்பெட்டை அலங்கரிப்பார்கள்.
கடந்த ஆண்டு சிறந்த உடை அணிந்து ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்த ஹாலிவுட் நடிகைகள் குறித்த சிறப்புத் தொகுப்பை இங்கே காணலாம்.
இந்த ஆண்டு எந்த எந்த நடிகைகள், எப்படி பட்ட புதுமையான ஃபேஷன் உடைகளில் வலம் வர உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெனிபர் லோபஸ்
ஆஸ்கர் ரெட்கார்ப்பெட் என்றாலே பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸின் அணிவகுப்பு இல்லாமல் இருக்காது. கடந்த ஆண்டு சில்வர் நிற மின்னும் மொசைக் உடையில் செம்ம செக்ஸியாக வந்து போஸ் கொடுத்து, ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் ஆஸ்கர் விருதுகளை கண்டுகளித்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்தார்.

லேடி காகா
கருப்பு நிற கவுனில் ஸ்ட்ராப்லஸ் இல்லாமல் செம்ம க்யூட்டாகவும் ஹாட்டாகவும் பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா கடந்த ஆண்டு ஆஸ்கர் ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்து இருந்தார். மேலும், கடந்த ஆண்டு பிராட்லி கூப்பர் உடன் இணைந்து ஆஸ்கர் விழாவில் ஸ்பெஷல் கச்சேரி ஒன்றையும் லேடி காகா அரங்கேற்றி இருந்தார்.

பிரை லார்சன்
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் மார்வெல் உள்ளிட்ட படங்களில் கடந்த ஆண்டு அசத்திய ஹாலிவுட் நடிகை பிரை லார்சன், 2019ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவின் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் விலை உயர்ந்த சில்வர் நிற கவுன் அணிந்து இருந்தார். தொடையழகு தெரியும் படியாக இருந்த அந்த 'கட்' ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தது.

எமி ஆடம்ஸ்
ஆறு முறை ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகை எமி ஆடம்ஸ் இரண்டு முறை சிறந்த கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் அமெரிக்கன் ஹஸல், ஷார்ப் ஆப்ஜெக்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவுக்கு வெள்ளை நிற டிசைனர் கவுனில் கம்பீரமாக வந்திருந்தார்.

சார்லிஸ் தெரான்
மேட்மேக்ஸ் ஃயூரி ரோட், அடாமிக் பிளாண்ட் மற்றும் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் பிரபலமான பாம்ஷெல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகை சார்லிஸ் தெரான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் ஃபேட் ப்ளூ கலரில் பின்னழகு முழுவதும் தெரியும் படியான ஹாட் கவுனை அணிந்து வந்து ரசிகர்களை வசீகரித்தார்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை எமிலியா கிளார்க், கடந்த ஆண்டு ரெட் கார்ப்பெட்டில், பிங்க் மற்றும் சில்வர் கலந்த நிறத்தில் ஸ்ட்ராப்லஸ் உடை அணிந்து பங்கேற்று ரேம்ப்வாக் செய்தார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு எமிலியா கிளார்க்கின் தரிசனத்தை காண பல ரசிகர்கள் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியை மிஸ் செய்யாமல் காண்பார்கள் என்பது நிச்சயம்.
Recommended Video

பிரியங்கா சோப்ரா
சமீபத்தில் நடைபெற்ற கிராமி விருது விழாவில், உள்ளாடை ஏதும் அணியாமல், லாங் ஓப்பன் டிரெஸ்சில் கலந்து கொண்டு உலக ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டால் எப்படி உடை அணிவாரோ என ரசிகர்கள் சிந்தித்தாலே தலை சுற்றிப் போகும். கடந்த 2016 மற்றும் 2017 ஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











