திக் திக் நிமிடங்களை அனுபவிக்க தயாரா? இன்னும் சில தினங்களில் கான்ஜூரிங் 3 ரிலீஸ்
நியூயார்க் : உலகெங்கிலும் திகில் பட ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள படம் கான்ஜூரிங் 3.
கொரோனா பரவலால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜூன் 4ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கூட்டம்
திகில் படங்களுக்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உலகெங்கிலும் காணப்படுகிறது. அதிலும் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் திகில் படங்கள் நம்மை வேறு உலகங்களுக்கே அழைத்து சென்றுவிடும். அத்தகைய அனுபவத்தை நாம் பெறுவதற்கு அதன் தொழில்நுட்பம் உள்ளிட்டவை காரணமாக அமைந்துள்ளன.

3ம் பாகம் ரிலீஸ்
இந்நிலையில் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப்போட்டுவரும் கான்ஜூரிங் படங்களின் வரிசையில் தற்போது அதன் 3ம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அதன் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் தற்போது ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திகில் அனுபவம்
சமீபத்தில் இந்த படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியாகி அனைவரையும் மயிர் கூச்செரிய செய்தது. கடந்த பாகங்களை போல இல்லாமல் இது உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் கொலைகளையும் அதன் பின்னணியையும் ஈத் மற்றும் லோரெய்ன் வாரன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் எத்க கதை போகிறது.

எச்பிஓ மேக்சில் வெளியீடு
இந்நிலையில் 4ம் தேதி அமெரிக்காவில் தியேட்டர்களில் இந்த படம் வெளியாக உள்ளதாகவும் மற்ற இடங்களில் எச்பிஓ மேக்சில் வெளியாக உள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டரில் இம்மாதம் 26ம் தேதி என ஒவ்வொரு தேதிகளில் படம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications