ராயல் டிராமா தி க்ரவுன் 5வது சீசன்.. டயானா சார்லஸ் தம்பதியாக நடிக்க போகிறவர்கள் இவர்கள்தான்!

லண்டன்: தி க்ரவுன் டிவி சீரிஸின் 5வது சீசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தி ஆடியன்ஸ் என்ற ஸ்டேஜ் டிராமாவை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டது தி க்ரவுன் டிவி சீரிஸ். இந்த சீரிஸ் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ராஜ குடும்பத்தை மையப்படுத்தி இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸ் சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் ராணி எலிசபெத் மற்றும் பிலிப்பின் திருமணம் இடம் பெற்றது. மேலும் அவரது தங்கை இளவரசி மார்க்ரேட்டின் நிச்சயதார்த்தமும் இடம் பெற்றது.

தி க்ரவுன் - 2வது சீசன்

தி க்ரவுன் - 2வது சீசன்

இரண்டாவது சீசனில் 1956 இல் சூயஸ் நெருக்கடியிலிருந்து 1963 இல் பிரதமர் ஹரோல்ட் மேக்மில்லனின் ஓய்வு மற்றும் 1964 இல் இளவரசர் எட்வர்டின் பிறப்பு வரையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மூன்றாவது சீசன் 1964 முதல் 1977 வரை, ஹரோல்ட் வில்சன் இரண்டு முறை பிரதமராக இருந்தது காட்டப்பட்டது. மேலும் கமிலா ஷாண்ட் மூன்றாவது சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

லேடி டயானா ஸ்பென்சருடன் திருமணம்

லேடி டயானா ஸ்பென்சருடன் திருமணம்

நான்காவது சீசன் 1979 முதல் 1990 களின் முற்பகுதி வரை காட்சிப்படுத்தியது. மேலும் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த காலம் மற்றும் இளவரசர் சார்லஸின் லேடி டயானா ஸ்பென்சருடன் திருமணம் ஆகிய நிகழ்வுகளை கொண்டிருந்தது.

21ஆம் நூற்றாண்டில் ராணியின் ஆட்சி

21ஆம் நூற்றாண்டில் ராணியின் ஆட்சி

இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது சீசன்கள் இந்த சீரிஸின் முடிவை கொண்டுள்ளன. இந்த சீசன்கள் 21 ஆம் நூற்றாண்டில் ராணியின் ஆட்சியை காட்சிப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி க்ரவுன் சீரிஸின் 5 சீசனுக்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசி டயானாவாக எலிசபெத் டெபிக்கி

இளவரசி டயானாவாக எலிசபெத் டெபிக்கி

கிரவுன் சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இந்த சீசனில் எலிசபெத் டெபிக்கி 90 களின் இளவரசி டயானாவாக நடிக்கிறார். அதே நேரத்தில் டோமினிக் வெஸ்ட் தனது பிரிந்த கூட்டாளியான இளவரசர் சார்லஸாக நடிக்கிறார்.

டொமினிக் வெஸ்ட் இளவரசர் சார்லஸாக

டொமினிக் வெஸ்ட் இளவரசர் சார்லஸாக

இதன் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது. புதிய புகைப்படங்களில் டொமினிக் வெஸ்ட் இளவரசர் சார்லஸாகவும், எலிசபெத் டெபிக்கி இளவரசி டயானாவாகவும் உள்ளனர்.

இருவரும் தூரத்தை உற்று நோக்கியப்படி

இருவரும் தூரத்தை உற்று நோக்கியப்படி

சீசன் 4ல் இளவரசி டயானா மற்றும் சார்லஸாக நடித்த எம்மா கோரின் மற்றும் ஜோஷ் ஓ'கானர் ஆகியோருக்குப் பதிலாக, டொமினிக் வெஸ்ட் மற்றும் எலிசபெத் டெபிக்கி ஆகியோர் நடிக்கின்றனர். வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் டயானா மற்றும் சார்லஸ் இருவரும் தூரத்தை உற்று நோக்கியப்படி யோசித்தப்படி உள்ளனர்.

எங்கள் புதிய இளவரசர் சார்லஸ்

எங்கள் புதிய இளவரசர் சார்லஸ்

மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் "எங்கள் புதிய இளவரசர் சார்லஸ் (டொமினிக் மேற்கு) மற்றும் இளவரசி டயானா (எலிசபெத் டெபிக்கி)" என்று கேப்ஷன் கொடுத்துள்ளது. இதனை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் கருத்து பதிவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

ஒரு சிலர் இளவரசர் சார்லஸ் படத்தால் ஈர்க்கப்படவில்லை. என்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தி க்ரவுன் சீசன் 5 சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீசன் 4ல் நடித்த கோரின் மற்றும் ஓ'கானர் இருவரும் தங்கள் நடிப்பிற்காக பாராட்டப்பட்டனர்.

டயானா மரணம் - மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?

டயானா மரணம் - மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?

கோவிட் காரணமாக 5வது சீசன் வழக்கத்தை விட தாமதமாகும் என தெரிகிறது. தி க்ரவுன் சீரிஸின் 5வது சீசன் அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. டயானா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த சீசனில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X