'ஜேம்ஸ் பாண்டி' நாயகிகள் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. அப்படியே 'ஷாக்' ஆயிடுவீங்க!

By Sudha

லாஸ் ஏஞ்சலெஸ்: எப்படி ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதேபோல அவரது படத்தில் வரும் நாயகிகளுக்காகவும் பிரத்யேக ரசிகர்கள் உண்டு.

ஆனால் அன்று பார்த்த ஜேம்ஸ் பாண்ட் பட நாயகிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்....

அன்று ரசித்து ரசித்துப் பார்த்த அவர்களின் இன்றைய கோலம் நிச்சயம் ஷாக்காகத்தான் இருக்கிறது.. வாருங்கள் ஒரு ரவுண்டு போய் விட்டு வருவோம்....

உர்சுலா ஆண்டிரஸ்

உர்சுலா ஆண்டிரஸ்

அந்தக் காலத்தில், அதாவது 60களில் இந்தப் பெயர் செய்த மாஜிக்கை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது... நம்ம ஊர் குசும்பர்கள், உர்சுலா 'அண்டிரஸ்' (un-dress) என்றுதான் செல்லமாக சொல்லிக் கிளுகிளுத்துக் கொண்டனர். 62ல் வெளியான டாக்டர் நோ படத்தின் நாயகிதான் உர்சுலா... உர்சுலா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்...

ஈனிஸ் கேசன்

ஈனிஸ் கேசன்

இவரும் டாக்டர் நோ படத்தில் நடித்துள்ளார். மேலும் பிரம் ரஷ்யா வித் லவ் படத்திலும் கலக்கியுள்ளார். மயக்கும் விழிகளுக்குச் சொந்தக்காரி இந்த ஈனிஸ்.. இப்ப இவரைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும் போல.

டேணியலா பியான்சி

டேணியலா பியான்சி

இவரும் பிரம் ரஷ்யா வித் லவ் படத்தில் தாதியான ரமனோவா என்ற கேரக்டரில் நடித்தவர். இப்போது பாட்டியாகி விட்டார்.

ஷிர்லி ஈட்டன்

ஷிர்லி ஈட்டன்

கோல்ட்பிங்கர் படத்தில் அசத்தியவர்தான் ஷிர்லி. ஆனால் இப்போது வயதாகிப் போய் ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார்.

ஜேன் செய்மோர்

ஜேன் செய்மோர்

லிவ் அன்ட் லெட் லிவ் படத்தின் நாயகி ஜேன். அப்போது இருந்தது போலவே இப்போதும் கவர்ச்சி குறையாமல் காணப்பட்டாலும், காலமும், வயதும் இவரது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.

பார்பரா பேக்

பார்பரா பேக்

திடீரென்று பார்த்தால் நம்ம ஊர் ஜீனத் அமான் மாதிரியே இருப்பார் பார்பரா பேக். அப்படி ஒரு பவர்புல் கண்கள் இவருக்கு. தி ஸ்பை ஹு லவ்ட் மீ படத்தில் நடித்துள்ளார். இப்போதும் அழகாகத்தான் இருக்கிறார்.. ஆனால் கண்களின் ஈர்ப்பைத்தான் காணவில்லை.

கோரியான் கிளெரி

கோரியான் கிளெரி

8 வயதில் பார்த்த மூன்ரேக்கர் முழுமையாக நினைவில் இல்லையென்றாலும், 79ல் வெளியான இந்தப் படத்தின் நாயகி கோரியான் கிளெரியின் க்யூட் அழகு படத்துக்கு பக்கபலமாக இருந்தது. இன்றும் அழகாகத்தான் இருக்கிறார் கோரியான்.. கவர்ச்சியான ஈர்ப்பு இல்லாவிட்டாலும் கூட.

திரில் கேரி லோவல்

திரில் கேரி லோவல்

89ல் வெளியான லைசென்ஸ் டு கில் படத்தில் திரில்லிங்கான அழகியாக வந்து போனவர் கேரி லோவல். இப்போதும் அதே திரில்லுடன் ஜில்லாகத்தான் இருக்கிறார்.

எலக்ட்ரிக் சோபி...

எலக்ட்ரிக் சோபி...

1999ல் வெளியான தி வேர்ல்ட் இஸ் நாட் இனப் படத்தில் பாண்டை படாதபாடு படுத்தியவர் சோபி மார்சியூ.. இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க...

லேட்டஸ்ட் நாயகி பெரனிஸ் மார்லோ

லேட்டஸ்ட் நாயகி பெரனிஸ் மார்லோ

இவர்தான் லேட்டஸ் பாண்ட் நாயகி. ஸ்கைபால் படத்தில் நடித்து வருகிறார். இவர் எதிர்காலத்தில் எப்படி இருப்பாரோ.. அப்புறம் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X