சிகப்பு மாத்திரையா? நீல மாத்திரையா? வித்தியாசமாக வெளியான தி மேட்ரிக்ஸ் 4 டிரைலர் அப்டேட்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடிப்பில் உருவாகி வரும் மேட்ரிக்ஸ் 4 டிரைலர் குறித்த வித்தியாசமான அப்டேட் வெளியாகி உள்ளது.

வரும் செப்டம்பர் 9ம் தேதி (நாளை) மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தின் அதிரடியான டிரைலர் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ரசிகர்களை நீலம் மற்றும் சிவப்பு மாத்திரைகளை தேர்ந்தெடுக்க சொல்லும் விதமாகவும் ரசிகர்கள் தேர்வு செய்யும் நிறத்துக்கான வித்தியாசமான மேட்ரிக்ஸ் பட கதாபாத்திர வாய்ஸ் ஓவர் ஒலித்து மேஜிக் செய்து வருகிறது.

22 ஆண்டு காலம்

22 ஆண்டு காலம்

1999ம் ஆண்டு மேட்ரிக்ஸ் படத்தின் முதல் பாகம் வெளியானது. தொடர்ச்சியாக அதன் 3 பாகங்கள் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி அந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகிறது என்கிற அறிவிப்பை படக்குழு வித்தியாசமான முயற்சியில் அறிவித்துள்ளது.

கீனு ரீவ்ஸ்

கீனு ரீவ்ஸ்

மேட்ரிக்ஸ் படத்தின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்த கீனு ரீவ்ஸுக்கு ஹாலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. எப்போது அவர் படம் வெளியானாலும் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் குவிவதால் அவருக்கு ஹாலிவுட்டில் இன்றளவும் மிகப்பெரிய மார்க்கெட் நிலவுகிறது. மேட்ரிக்ஸ் படத்தின் 3 பாகங்களையும் தாண்டி கீனு ரீவ்ஸ் நடிப்பில் வெளியான ஜான் வீக் சீரிஸ் மற்றும் நாக் நாக் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.

பிரியங்கா சோப்ரா இருக்காரு

பிரியங்கா சோப்ரா இருக்காரு

இயக்குநர் லானா வச்சோஸ்கி இயக்கத்தில் கீனு ரீவ்ஸ், கேரி அனெ மோஸ் உள்ளிட்ட மேட்ரிக்ஸ் நடிகர்களுடன் இந்த 4ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் நீலமா? சிகப்பா? எந்த மாத்திரையை எடுக்கப் போறீங்க என கேட்டு போட்ட போஸ்ட்டும் இந்திய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான முயற்சி

ரசிகர்கள் நீல மாத்திரையை க்ளிக் செய்தால் மேட்ரிக்ஸ் படத்தின் பிரபலமான ஹாரிஸ் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர் ரசிகர்களை நிஜத்திற்கும் ஃபிக்‌ஷனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சொல்லி குழப்பி விடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தாக சிகப்பு மாத்திரையை க்ளிக் செய்யும் ரசிகர்களுக்கு அப்துல் - மட்டீனின் குரல் ஒலிக்கும் படி வித்தியாசமாக இந்த அப்டேட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

உலகளவில் எதிர்பார்ப்பு

உலகளவில் எதிர்பார்ப்பு

மேட்ரிக்ஸ் முதல் பாகம் 1999ம் ஆண்டு வெளியான நிலையில், அதன் அடுத்த இரு பாகங்களான மேட்ரிக்ஸ் ரீலோடட் மற்றும் மேட்ரிக்ஸ் ரிவால்யூஷன்ஸ் படங்கள் 2003ம் ஆண்டிலேயே அடுத்தடுத்து வெளியாகின. இந்நிலையில், சுமார் 18 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்துள்ள மேட்ரிக்ஸ் 4ம் பாகத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ள இந்த டிரைலரில் டெக்னாலஜி எப்படி எல்லாம் விளையாடப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X