“The Matrix Resurrections’’… மிரட்டலான டிரைலர் வெளியானது !

லாஸ் ஏஞ்சல்ஸ் : நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'The Matrix Resurrections' திரைப்படத்தின் முழு நீள டிரைலரை வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் ஜான் பிங்கெட் ஸ்மித் உடன் ஹென்விக், ஜொனாதன் கிராஃப் மற்றும் கிறிஸ்டினா ரிச்சி ஆகியோரும் நடிக்கின்றனர்.

வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ் மற்றும் வீனஸ் காஸ்டினா புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் கிருஸ்துமஸ் பாண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

The Matrix Resurrections

The Matrix Resurrections

'The Matrix Resurrections' புகழ்பெற்ற அறிவியல் புனைகதைத் தொடரின் நான்காவது திரைப்படம். முந்தைய மூன்று படங்களின் வழி காட்டுதலின் படியே இத்திரைப்படம் உ ருவாக்கப்பட்டுள்ளது. கீனு ரீவ்ஸ் மற்றும் கேரி-ஆன் மோஸ் நியோ மற்றும் டிரினிட்டியா இப்படத்தில் நடித்துள்ளனர். ஜடா பிங்கெட் ஸ்மித் மீண்டும் நியோப் ஆக வருகிறார். பிரியங்கா சோப்ரா, யஹ்யா அப்துல் மதீன், ஜெசிகா ஹென்விக், நீல் பேட்ரிக் ஹாரிஸ் மற்றும் ஜொனாதன் கிராஃப் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

3 நிமிட டிரைலர்

3 நிமிட டிரைலர்

3 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் நியோ தான் யார் என்பதை மறந்து விடுகிறார். அவர் வாழ்ந்த வாழ்க்கையை அவர் மறந்து விடுகிறார். இதற்காக அவர் மருத்துவரை சந்திப்பது போல் காட்சி டிரைலரில் உள்ளது. நியோ எனக்கு பைத்தியமா என்று கேட்கிறார். இதற்கு தாமஸ் ஆண்டர்சன் நாங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்துவது இல்லை என்று கூறினார். மேலும், அவர் நியோவுக்கு ஒரு புகழ்பெற்ற நீல மாத்திரைகளை வழங்குகிறார்

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

மேலும் அந்த டிரைலரில் நியோ ஒரு பெண்ணை சந்திக்கிறார். ஆனால் அவள் யார் என்பது இவருக்குத் தெரியவில்லை. அந்த பெண் வேறு யாருமல்ல, பிரியங்கா சோப்ரா தான். பெரிய பிரேம்கள் கொண்ட கண்ணாடிகளை அணிந்து கொண்டு வருகிறார். அதேபோல, நியோ மற்றும் டிரினிட்டி அவர்கள் யார் என்பதை மறந்து விட்டது போல டிரெய்லர் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாததால் அவர்கள் இருவரும் சண்டையிடுகின்றனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள இந்த டிரைலர் அனைரையும் மெய்மறந்து பார்க்க வைத்துள்ளது. கருப்பு பூனைகள், டோஜோக்களில் சண்டைகள், அதிவேக அதிரடி காட்சிகள் என டிரைலர் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் பாண்டியை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X