மம்மி படத்துல வில்லனா நடிச்சவங்க இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. 54 வயசுலயும் பட்ரிசியா வேறலெவல்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறுவயதில் மம்மி என்னும் ஹாலிவுட் படத்தை பார்த்து பிரமிக்காத ஆட்களே இருந்திருக்க மாட்டார்கள். 1999 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் புதைந்து கிடந்த எகிப்து மம்மிகள் தொடர்பான பல படங்கள் வர காரணமாக அமைந்தது.
அந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிராண்டன் ப்ராசர் மற்றும் ஹீரோயினாக நடித்த ரேச்சல் வீஸுக்கு மட்டுமின்றி படத்தில் வில்லனாக நடித்த அந்த மொட்டை தலை மம்மிக்கும் அவரது காதலிக்கும் கூட இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியாகி ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் கட்டி போட்ட மம்மி படத்தில் வில்லனாகவும் வில்லியாகவும் நடித்த நடிகர்கள் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து நெட்டிசன்கள் மம்மி படத்தில் அவர்கள் இருந்த தோற்றத்தையும் தற்போது உள்ள தோற்றத்தையும் கம்பேர் செய்து நாஸ்டாலஜியாவில் மூழ்கி வருகின்றனர்.
ஆயிரத்தில் ஒருவனுக்கே அஸ்திவாரம்: செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பார்த்திபன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கே அஸ்திவாரம் இந்த படம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஸ்டீபன் சோமர்ஸ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வெளியான தி மம்மி திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமாக மாறியது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களும் எடுக்கப்பட்டு வெளியாகின. ஸ்பின் ஆஃப் திரைப்படமாக தி ஸ்கார்பியன் கிங் படமும் வெளியானது. இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடித்த மல்யுத்த வீரர் டுவைன் ராக் ஜான்சன் இன்ற ஹாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டாராக மாறி உள்ளார்.

மம்மி வில்லன்: தனது வாயை பிளந்து ஒட்டுமொத்த பாலைவனத்தையும் விழுங்கும் அளவுக்கு மாய வித்தைகளை செய்து மிரள வைத்த மம்மி கதாபாத்திரமான இம்மோடாப் கதாபாத்திரத்தில் நடித்த அர்னால்டு வாஸ்லூவுக்கு இப்போ 62 வயதாகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக இவர் நடித்த நிலையில் மூன்றாவது பாகத்தில் இவருக்கு பதிலாக ஜெட் லி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிஐஜோ சீரிஸ், ஜேக் ரியான் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பட்ரீசியா வெல்லாஸ்கொஸ்: அனக் சுனாமுன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பட்ரீசியா வெல்லாஸ்கொஸுக்கு 54 வயதாகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பாக மம்மி படத்தில் நடித்ததை விட இந்த வயதிலும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்காரே என அவருடைய லேட்டஸ்ட் போட்டோவையும் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இப்போ எப்படி இருக்காங்க: அர்னால்ட் வாஸ்லூ மற்றும் பட்ரீசியா வெல்லாஸ்கொஸ் என இருவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. சிறுவயதில் நம்மை பயமுறுத்தியவர்கள் 25 வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கிறார்கள் பாருங்க என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு அதெல்லாம் வேறலெவல் காலம். இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்கள் இந்தளவுக்கு ரசிகர்களை கவர்வதில்லை என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர் பிரெண்டன் ஃபிராஸர் இரண்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு மம்மி பேய்களை சுட்டுத் தள்ளுவது எல்லாம் அசத்தலான ஆக்ஷன் காட்சிகளாக இப்போது பார்த்தாலும் இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











