twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்: ஹாலிவுட்டிலும் இப்போ நிலமை சரியில்ல!

    By Vignesh Selvaraj
    |

    ஹாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை இந்த சம்மர் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. 'வொண்டர் வுமன்', 'டன்கிர்க்' போன்ற சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனாலும், ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்த்தால் இந்த கோடையில் வெளிவரும் திரைப்படங்களின் வெற்றி சதவிகிதம் வீழ்ச்சியை அடைந்திருப்பதைக் கண்கூடாகக் காணலாம். தோல்வியைத் தவிர்க்கப் பல படங்கள் வெகுவாகப் போராடவேண்டியிருக்கிறது.

    இந்த வருடத்தின் சம்மரில், எதிர்பார்த்த வெற்றியையும், லாபத்தையும் ஈட்டமுடியாமல் பல படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. கோடைகாலத் திரைப்படங்களின் மூலம் தயாரிப்பு நிறுவனங்கள் 4 பில்லியன் டாலருக்கும் குறைவான வருவாயையே ஈட்டி இருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட 13- 15 சதவிகிதம் குறைவு. கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பிறகு, மிகவும் குறைவான வருவாய் ஈட்டிய ஆண்டு இதுதான். சம்மர் ரிலீஸ் படத் தயாரிப்பு நிறுவனங்களின் பெரும் நம்பிக்கையே, லாபம் தரும் புதிய கதைகளைக் கண்டெடுத்துத் தயாரிப்பதுதான்.

    The reason behind flop of hollywood cinemas

    ஸ்டீபன் கிங்கின் டாப் விற்பனைப் புத்தகமான 'தி டார்க் டவர்', 'வாலேரியன் அண்ட் த சிட்டி ஆஃப் எ தௌசன்ட் பிளானட்ஸ்' மற்றும் லுக் பெஸனின் அறிவியல் புனைவு நாவலைத் தழுவிய படத்துக்குப் பிறகு ஒரு பெருத்த நம்பிக்கை உருவாகியிருக்கிறது. லுக் பெஸனின் அறிவியல் புனைகதை ஒரு பிரெஞ்சு கிராபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

    ஆனால் இவை இரண்டும், ரிஹானா மற்றும் மேத்யூ மெக்கோனாகே போன்ற சூப்பர் ஸ்டார்களைக் காட்டியிருந்தாலும், பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் தோற்றுப் போயின. இந்தக் கதைகள் பார்வையாளர்களைக் குழப்பம் அடையச் செய்தன. தொடர் வெற்றிகளைக் கொடுத்தவர்களாக நாம் நம்புகின்ற போதிலும், அவர்கள் மீண்டும் நிரூபிக்கவேண்டிய அவசியம் உண்டாகிறது.

    கனமான கதைகளைக் கொண்ட படங்கள் தோல்வியடைவதால், தயாரிப்பு நிறுவனங்களும் இதுபோன்ற படங்களை எடுக்க யோசிக்கின்றன.

    The reason behind flop of hollywood cinemas

    டாம் க்ரூஸ் நடித்த 'தி மம்மி' படமும் விமர்சன ரீதியாகப் பலத்த அடிவாங்கினாலும், யுனிவர்சல் நிறுவனத்தின் வியாபார மாயாஜாலத்தால் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடைபோட்டது.

    இப்படி தொடர்ச்சியான எந்த நிலைத்தன்மையும் இல்லாமல்தான் ஹாலிவுட் இயங்கிக்கொண்டிருக்கிறது. 'கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி vol-2', 'ஏலியன்' ஆகியவையும் தோல்வியடைந்தன. எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தன. ட்வைன் ஜான்சன், 'பேவாட்சின் தோல்வியானது விமர்சகர்களின் தவறு' என்று ட்வீட் செய்தார். உண்மையில் அது ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தது என்பதே நிஜம்.

    ரோட்டன் டொமட்டோஸ் போன்ற வலைதளங்களை விட, ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்க பொதுமக்களின் விமர்சனங்களே போதுமானதாக இருக்கின்றன. 'தி டார்க் டவர்' மற்றும் 'கிங் ஆர்தர்' போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் மெகா ஃப்ளாப் ஆனதை ரசிகர்களின் குற்றமாகப் பார்க்கமுடியாது. படங்கள் விமர்சனங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும். மாற்றாக, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 'வொண்டர் வுமன், மற்றும் பேபி டிரைவர்' படங்கள் 400 மில்லியன் டாலர் சம்பாதித்தன. அவை விமர்சக ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. 'War of the planet of the Apes' படம் விமர்சக ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றாலும் வசூலில் சறுக்கியது.

    'வொண்டர் வுமன்', 'த பிக் சிக்', 'கேர்ள்ஸ் ட்ரிப்' போன்ற படங்கள் விமர்சக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதற்குக் காரணம், இதுவரை பார்த்திராத கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    ஹாலிவுட் சினிமா உலகம் புதிர் நிறைந்தது. பார்வையாளர்கள் இனி மற்ற பார்வையாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள். விமர்சகர்களும் ரசிகர்களுக்கு உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள். ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே படங்களைப் பார்க்கப் போகிறார்கள். டாம் குரூஸ் கூட நட்சத்திர சக்தியை இழப்பார். இங்கேயும் அப்படித்தானே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ரஜினி, அஜித், விஜய் படங்களும் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்ததை நம் கண்முன்னே பார்த்திருக்கிறோம் தானே..?

    ஹாலிவுட்டின் பிரச்னைகளுக்கு எளிய தீர்வு ஒன்றுதான். அது நல்ல படங்களைத் தயாரிப்பது!

    English summary
    Summer box office projected lowest price since 2007 in hollywood. The wonder women and dunkirk are some exceptions in this.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X