இந்த முறை மிஸ் ஆகாது.. ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

லண்டன்: டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்துள்ள 'No Time To Die' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான புதிய டிரைலர் உடன் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்கிற அறிவிப்புடன் ஏகப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்களை உள்ளடக்கிய டிரைலர் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

பெரிய மதில் சுவரை பைக்கில் தாண்டுவது, கார் புரட்டி அடித்துக் கொண்டு விழுவது என ஏகப்பட்ட ஸ்டன்ட் காட்சிகள் ஆக்‌ஷன் விரும்பிகளை திருப்திப்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது.

நோ டைம் டு டை

நோ டைம் டு டை

சாக கூட நேரமில்லை என்கிற அர்த்தத்துடன் உருவாகியுள்ள No Time To Die ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகப் போகிறது. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி அட்டகாச டிரைலருடன் வெளியாகி இருக்கிறது.

கடைசி படம்

கடைசி படம்

கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் திரைப்படத்தின் மூலம் புதிய ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான நடிகர் டேனியல் கிரெய்க், ஆளை விடுங்கடா சாமி என கெஞ்சியும் அவரை வைத்து எடுத்துள்ள படம் தான் நோ டைம் டு டை. மேலும், இதற்கு மேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்து விட்டுத்தான் இந்த படத்தில் நடித்துள்ளார். இனி வரும் 007 படங்களில் யார் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் என்பதையும் இந்த படத்தில் ரிவீல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனாவால் தாமதம்

கொரோனாவால் தாமதம்

இயக்குநர் கேரி ஜோஜி புகுனகா இயக்கத்தில் உருவாகியுள்ள நோ டைம் டு டை படம் கடந்த ஆண்டே மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த நவம்பர் ரிலீஸ் என ஒரே அடியாக தள்ளிப் போனது. ஆனால், கொரோனா அப்போதும் துரத்தியதால் இந்த ஆண்டு ஆரம்பத்திலும் ஜேம்ஸ் பாண்ட் வெளியாக முடியவில்லை. ஒரு வழியாக இம்மாதம் நோ டைம் டு டை ரிலீசாகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்தியா உள்பட உலகளவில் நோ டைம் டு டை படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம் மற்றும் போஜ்புரி என பல்வேறு மொழிகளில் இந்தியாவில் இந்த படம் வெளியாகிறது.

கடைசி டிரைலர்

இதற்கு மேல் புதிதாக டிரைலர்களை வெளியிட்டு ரசிகர்களின் பொறுமையை சோதிக்க மாட்டோம் என்கிற உறுதியுடன் கடைசி சர்வதேச டிரைலர் என்கிற அறிவிப்புடன் இந்த டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தியேட்டர்களில் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகும் நிலையில், மீண்டும் ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த படம் ரசிகர்களை வரவழைத்தால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏகப்பட்ட தமிழ் படங்கள் தைரியமாக களமிறங்கும்.

லேடி ஜேம்ஸ் பாண்ட்

லேடி ஜேம்ஸ் பாண்ட்

முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான 'டாக்டர் நோ'வில் இருந்து 25வது படமான 'நோ டைம் டு டை' வரை அனைத்து படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஆண் நடிகர்களே நடித்து வந்த நிலையில், புதிதாக லேடி ஜேம்ஸ் பாண்டை நோ டைம் டு டை படத்திலேயே அறிமுகப்படுத்தி உள்ளனர். டேனியல் கிரெய்க் ரிட்டயராகும் நிலையில், லஷானா லின்ச் எனும் நடிகை ஜேம்ஸ் பாண்டாக மிரட்ட உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X