twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேங்கப்பா உலகளவில் இத்தனை ஆயிரம் கோடி வசூல் செய்ததா தோர்: லவ் அண்ட் தண்டர்.. இந்தியாவில் எவ்வளவு?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: தோர் ரக்னோரக் படத்தை இயக்கிய டைக்கா வைட்டிட்டி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான தோர் 4ம் பாகம் அல்லது தோர்: லவ் அண்ட் தண்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், மார்வெல் படம் என்றாலே படத்தை தியேட்டரில் போய் அதன் 3டி அனுபவத்துக்காகவே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், 7 நாட்களில் அந்த படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது.

    இந்தியாவில் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் படங்கள் அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றாலும், போதுமான வசூலை அந்த படம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Thor: Love and Thunder Review - ஆயிரம் கோடி பட்ஜெட்.. நல்ல சிஜி இருக்கு.. ஆனால், கதை எங்கப்பா? Thor: Love and Thunder Review - ஆயிரம் கோடி பட்ஜெட்.. நல்ல சிஜி இருக்கு.. ஆனால், கதை எங்கப்பா?

    தோர் 4ம் பாகம்

    தோர் 4ம் பாகம்

    கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இடிக்கடவுள் தோராக நடிக்கும் மார்வெல் உலகின் தனிப் படமான தோர் 4ம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் தோர்: லவ் அண்ட் தண்டர் எனும் பெயரில் வெளியானது. காமெடி, ரொமான்ஸ், ஆக்‌ஷன் கலந்து இந்த படத்தை இயக்குநர் டைக்கா வைட்டிட்டி இயக்கி இருந்தார். டார்க் நைட் ரைசஸ் படத்தில் பேட்மேன் ஆக அசத்திய கிறிஸ்டியன் பேல் இந்த படத்தில் கோர் எனும் கடவுள்களையே கொல்லும் வில்லனாக மிரட்டி உள்ளார்.

    உலகளவில் வசூல்

    உலகளவில் வசூல்

    மார்வெல் திரைப்படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருவது சகஜமான ஒன்றாகவே மாறிவிட்டது. வியாபார நோக்கத்தை கருதியே அடுத்தடுத்த படங்களை எடுத்து ரிலீஸ் செய்து பல ஆயிரம் கோடிகளை அசால்ட்டாக மார்வெல் நிறுவனம் சம்பாதித்து விடுகிறது. கடந்த வாரம் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் திரைப்படம் புதன்கிழமை வரை உலகளவில் 302 மில்லியன் டாலர்கள் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாம். இந்திய மதிப்பில் சுமார் 2398 கோடி ரூபாய் ஆகும்.

    இந்திய வசூல் குறைவு

    இந்திய வசூல் குறைவு

    உலகளவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற படங்களின் டாப் 5 பட்டியலுக்குள் இந்த படம் ஒரே வாரத்தில் இடத்தை பிடித்து விட்டது. ஆனால், தோர் படத்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பு தற்போது இல்லை. சம்மரில் வெளியாகி இருந்தால், பெரிய தொகையை ஒரே வாரத்தில் ஈட்டி இருக்கும். ஒரு வார காலம் ஆகியும் 75 கோடி ரூபாய் வசூலை தான் இந்தியாவில் இந்த படம் பெற்றுள்ளது. இந்திய படங்களே 2 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து வரும் நிலையில், மார்வெல் படத்திற்கு இது பெரும் பின்னடைவு தான் என்றாலும், இது போதுமான வசூல் தான் என்கின்றனர்.

    ஓடிடியில் எப்போ

    ஓடிடியில் எப்போ

    மார்வெல் திரைப்படங்களான பிளாக் விடோ, சான்ங் சி உள்ளிட்ட படங்கள் 80 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியான நிலையில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வெறும் 47 நாட்களில் ஓடிடியில் வெளியானது. ஜூலை மாதம் 8ம் தேதி வெளியான தோர் 4ம் பாகம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    English summary
    Thor: Love and Thunder India and Worldwide Box office report and OTT release date details is here. Marvel Cinematic Universe movie Thor: Love and Thunder not do well at Indian Box Office compare to other Marvel movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X