ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி.. டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு.. சோகத்தில் ஹாலிவுட்

நியூயார்க்: உலக அளவில் ஃபேமஸான படம் டைட்டானிக். கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரமாண்டத்தையும், காதலையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்துக்கு இன்றளவும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தில் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக நடித்த பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஹாலிவுட் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மான்செஸ்டரை பூர்வீகமாகக் கொண்ட பெர்னார்ட் ஹில் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சிறு வயதிலிருந்தே நடிப்பை கற்றுக்கொண்டவர். பிறகு தி பிளாக் ஸ்டஃப் என்ற சீரிஸ் மூலம் ரசிகர்களால் அறியப்பட்ட பெர்னார்ட் தொடர்ந்து பல டிவி ஷோக்களிலும், நாடகங்களிலும் நடித்தார். பிறகு திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் டைட்டானிக் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Titanic Actor Bernard Hill Passed Away Here are the details

டைட்டானிக்: உலக அளவில் எத்தனையோ காதல் கதைகள் வந்திருக்கின்றன. வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்ததுதான் டைட்டானிக் திரைப்படம். 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அதில் காதலை கலந்து பிரமாண்டமாக கொடுத்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இந்தப் படம் உலகம் முழுவதும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் ஆஸ்கர் விருதில் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 11 ஆஸ்கர்களை அள்ளியது படம்.

கேப்டன் பெர்னார்ட் ஹில்: இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்ளிட்டோரை தவிர்த்து பெரிதும் கவனம் ஈர்த்தவர்தான் படத்தில் டைட்டானிக் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்த பெர்னார்ட் ஹில். கப்பல் மூழ்கும் தருவாய்க்கு வரும்போது தனது முகத்தில் அவர் கொடுத்த எக்ஸ்பிரெஷன் மூலம் திரையில் இருக்கும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் எளிதாக கடத்தியவர். அந்தப் படத்தின் மூலம் பெர்னார்ட் ஹில் மேற்கொண்டு ஃபேமஸ் ஆனார்.

அடுத்தடுத்த படங்கள்: டைட்டானிக் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு பெர்னார்ட் ஹில் மேற்கொண்டு பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்தார். அந்தவகையில் தி ஸ்கார்ப்பியன் கிங், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், விம்பிள்டன், North vs South உள்ளிட்ட ஏராளமான படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் ஃபார் எவர் யங் என்ற படம் வெளியானது.

உயிரிழப்பு: இந்நிலையில் 79 வயதாகும் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து டைட்டானிக் படத்தில் இவருடன் நடித்த பர்பரா டிக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெர்னார்ட் ஹில் உயிரிழந்தார் என்ற தகவலை துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். நாங்கள் இருவரும் ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ, பெர்ட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சேர்ந்து பணியாற்றினோம். அவருடன் பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X