மறக்கமுடியாத காதல் காவியம் ’டைட்டானிக்‘…புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில்!

சென்னை : புகழ்பெற்ற காதல் காவியமான டைட்டானிக் புதுப்பொழிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது.

லியனார்டோ டிகாப்பிரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் திரைப்படம் படம் டைட்டானிக்.

1997ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகில் அதிகம் வசூல் சாதனைப்படைத்தது.

டைட்டானிக்

டைட்டானிக்

உலக கப்பல் போக்குவரத்து வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத சோக வடுவை ஏற்படுத்தியது டைட்டானிக் கப்பல் விபத்து. கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ந் தேதி இரவு பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளானது. பனிப்பாறையில் மோதிய இரண்டு மணிநேரத்திலேயே மொத்த கப்பலும் கடலுக்குள் மூழ்கியது.

ஜாக் ரோஸை மறக்க முடியுமா?

ஜாக் ரோஸை மறக்க முடியுமா?

இந்த உண்மைச் சம்பவத்தில், நெகிழ்ச்சியான காதலை இணைத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படம் தான் டைட்டானிக். 1997ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பெரியவர்கள், குழந்தைகள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படம் வெளியாக 25 ஆண்டுகள் கடந்து ஓடினாலும் இந்த படத்தில் நடித்த ஜாக் ரோஸின் காதலை என்றுமே மறக்க முடியாது.

 11 ஆஸ்கர் விருது

11 ஆஸ்கர் விருது

டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. ஒரே படத்தைச் சேர்ந்தவர்களே மீண்டும் மீண்டும் ஆஸ்கர் அரங்கை அலங்கரித்தார்கள். படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று விருதுகளை அள்ளிச் சென்றார். டைட்டானிக்கிற்கு முன்பும் சரி, பின்பும் சரி ஆஸ்கர் வரலாற்றில் அதன் சாதனையை எந்தப் படங்களாலும் எட்ட முடியவில்லை.

டைட்டானிக் 3D

டைட்டானிக் 3D

டைட்டானிக் கப்பல் மூழ்கிய நூறாவது வருடத்தை நினைவுபடுத்தும் வகையில், கடந்த 2012- ம் ஆண்டு டைட்டானிக் படம் 3D யில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனபோதும் புதிய திரைப்பட போல டைட்டானிக் 3D திரைப்படத்திற்கும் திரையரங்கில் கூட்டம் அலைபோதிய மிகப்பெரிய வசூலைக் குவித்தது.

 மீண்டும் புதுப்பொலிவுடன்

மீண்டும் புதுப்பொலிவுடன்

இந்நிலையில், டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து, புதுப்பொலிவுன் மீண்டும் டைட்டானிக் திரைப்படம் வெளியாக உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி, காதலர் தினத்தன்று இந்தப் படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரையில் மீண்டும் ஜாக் ரோசைப் பார்க்க டைட்டானிக் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X